Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவோட "தராசு தட்டு" சாயுதா? விழுந்த இடத்திலிருந்து மீண்டும் நிமிர்ந்தெழும் எடப்பாடி பழனிசாமி? ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி படு குஷியில் இருக்கிறார்.. இதையடுத்து, அதிமுகவின் பலத்தை பன்மடங்காக பெருக்கும் முயற்சியிலும் தீவிரமாகி உள்ளார்.

கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை கொண்டதாகும்.. இங்கு மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

 Can Edapadi Palaniswami win Kongu Region again and What is DMK going to do

திமுக கொங்கு: ஆனால், கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் "எளிதில் வெற்றி" என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடிதான் திமுக வெற்றி பெற்றது.. இது தொடர்பான வருத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னமும் உள்ளது.. கூடுதலாக, 20 இடங்களில் கொங்குவில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே அவரது வருத்தம்

குறிப்பாக, கொங்கு மண்டலம்.. கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.. இத்தனைக்கும் இதே தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த தேர்தலில் திமுக நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்தது. இதற்கு பிறகுதான், கொங்குவை பலப்படுத்தும் முடிவுக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜி: இப்படிபட்ட சூழலில்தான், செந்தில்பாலாஜியை கொங்குவில் களமிறக்கப்பட்டார். அவருடன் மூத்த தலைவர்கள், முத்துசாமி, சக்கரபாணி, வெள்ளக்கோயில் சாமிநாதன் என பெரும்புள்ளிகள் நாலாபக்கமும் சுழன்று திமுகவின் ஆதரவு பலத்தை பெருக்கினார்கள்.. இதில் செந்தில் பாலாஜி, அனைவரையும்விட, படு ஸ்பீடில் இறங்கினார்..

தன்னால், முடிந்த அளவு கொங்குவை வளைத்து, மாஜிக்கள், அதிருப்தியாளர்கள், சீனியர்கள், மாற்று கட்சியினர் என தன்னால் இயன்ற அளவுக்கு திமுகவுக்கு அழைத்து வந்தார்.. அமமுக பழனியப்பன், அதிமுக தோப்பு வெங்கடாசலம், நாமக்கல் முன்னாள் எம்.பி., சுந்தரம், சேலம் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம் போன்ற பெருந்தலைகளை, திமுக பக்கம் கொண்டுவந்ததில் செந்தில்பாலாஜிக்கு பெரும்பங்கு உள்ளது.

ஆறுக்குட்டி: அதிலும் கடந்த வருடம் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அதிமுக, அமமுக, பாஜக, உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த, அதிமுகவின் எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன், மொத்தம் 55,000 பேரை கொண்டுவந்து திமுகவில் இணைத்து அசத்தினார்.. முதல்வரே இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டு போனார். இதே உழைப்பும், வெற்றியும், ஈரோடு இடைத்தேர்தல் வரை நீடித்தது.

இப்படி திமுகவின் கிராப் கொங்குவில் மெல்ல மெல்ல ஏறவும், எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்று சொல்லப்படும் இதே கொங்கு மண்டலம் சறுக்கலை காண ஆரம்பித்தது. இதற்கு, ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு சாட்சியானது.

இந்நிலையில், பொதுச்செயலாளர் பதவி, மதுரை மாநாடு வெற்றி, பொதுக்குழு தொடர்பான ஹைகோர்ட் தீர்ப்பு என வரிசையாக எடப்பாடி பழனிசாமியின் கிரேப் மேலே எழ தொடங்கி உள்ளது.. வழக்கமாக தேர்தல் நெருங்கும் சமயங்களில், கட்சி தாவல்கள் நடப்பது இயல்பு என்றாலும், இப்போதே தாவல்கள் துவங்கிவிட்டன.

2 பேர்: நேற்றைய தினம், 2 திமுக கவுன்சிலர்கள் அதிமுக பக்கம் சாய்ந்துள்ளனர்.. வெறும் 2 பேராக இருந்தாலும், இதன் தாக்கம் சற்று வீர்யமாகவே உள்ளது.. காரணம், ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில், திமுக கவுன்சிலர்கள் 2 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 5-வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் 11-வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

அதிமுக கைப்பற்றுகிறதா: இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா 7 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் இருக்கிறார்கள்.. பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த ராகிணியும், துணைத்தலைவராக அதிமுகவின் என்.ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், இப்போது 2 பேர் அதிமுகவில் இணைந்துள்ளதால் பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் நிலைமையும் உருவாகியிருக்கிறது

அதுமட்டுமல்ல, எந்த ஈரோடு மண்ணில், அதிமுக இடைத்தேர்தலில் மண்ணை கவ்வியதோ, அதே ஈரோட்டிலிருந்து 2 பேரை, வெகு சீக்கிரத்திலேயே தட்டி தூக்கியிருப்பதையும் லேசாக கடந்து போய்விட முடியாது.
பலவீனமா?: செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு, கொங்குவில் திமுக பலவீனமாகிவிட்டதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், ஈரோட்டில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அதிமுகவுக்கு தாவியிருப்பது, திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளதாம்.. இதையடுத்து, கொங்குவில் பிரத்யேக கவனத்தை இனி திமுக செலுத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, எடப்பாடி மேற்கொண்டு வரும் 4 நாள் சுற்றுப்பயணம், மிகுந்த வரவேற்பை பெற்று தந்து வருகிறது.. தன்னுடைய தொகுதியில்தான், இந்த 4 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்...

 Can Edapadi Palaniswami win Kongu Region again and What is DMK going to do

டீக்கடையில் எடப்பாடி: நேற்றுகூட, எடப்பாடியை அடுத்த கன்னங்காடு, ஆவணியூர், மோட்டூர் பிரிவுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது ஆவணியூர் கிராமத்தில் சாலையோர டீக்கடையில் உட்கார்ந்து எடப்பாடி டீ குடிப்பதை பார்த்துமே, அந்த பகுதி மக்கள் திரண்டு வந்துவிட்டனர்..

அனைவரிடமும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார், அத்துடன், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமியுடன் அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பிறகு, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதாவது, முழுக்க முழுக்க கொங்குவில் தன்னுடைய கவனத்தை திருப்பியிருக்கிறார்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+