"தம்பி ஸ்டாலின்".. கையை பிசையும் "தைலாபுரம்".. ஒரு கோடியா? எகிறியடிக்கும் பாமக.. கவனிக்கும் அறிவாலயம்
சென்னை: திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், மொத்த கணக்கும் தகர்ந்து நொறுங்கி விழுந்துள்ளது..!!
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் கடந்த வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.. இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் தருவதாகவும், வருத்தம் தருவதாகவும் பாமக தன் கருத்தை அப்போதே பதிவு செய்தது.
அதேசமயம், உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும், அதனால், தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மறுபடியும் சட்டமியற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை பாமக விடுக்க ஆரம்பித்தது.

திட்டவட்டம் ராமதாஸ்: அதுமட்டுமல்ல, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது என்று அன்புமணி ராமதாஸ் மனம் திறந்து பாராட்டினாலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக கூறினார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் இதுகுறித்து பேசும்போது, "தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும். இதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். போராட்டங்கள் ஏதும் நான் அறிவிக்கப் போவதில்லை" என்று பேசியிருந்தார்..
வன்னியர் போராட்டம் : வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தை முதல்வர் பார்த்துக் கொள்வார், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது என்று பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் அன்புமணியும் கூறியிருந்தார். இவர்கள் இருவரின் அன்றைய பேச்சுக்களும், திமுக தரப்புக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருந்ததுடன், திமுக மீது எந்தவிதமான ஆதங்கத்தையும் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்தவில்லை என்பதை அரசியல் கட்சிகள் உற்று கவனித்தன.
ஆனால், இந்த நம்பிக்கைகள் தற்போது மெல்ல மெல்ல தகர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த சில தினங்கள் வரை, திமுகவுடன் பாமக கூட்டணிக்கு முயல்வதாக தகவல்கள் வட்டமடித்த நிலையில், நெய்வேலி விவகாரத்தினால், திமுக அரசு மீது பாமகவுக்கு அதிருப்தி வெளிப்பட்டது.. வெளிப்படையாகவே திமுக தரப்பை விமர்சிக்கவும் செய்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.. இந்த விவகாரத்தையடுத்து, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் இந்த உரசலும் விரிசலும் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு: அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது பாமக.. திமுக ஆட்சி வந்ததுமே, இந்த இடஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு பிரச்சனை சென்றதால், சாதிவாரி கணெக்கெடுப்பு நடத்தாமல் எந்த டேட்டாவை வைத்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டது? என நீதிமன்றம் எழுப்பிய கேள்வியால், இந்த இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமூகம் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, தரவுகளை சேகரிப்பதற்காக திமுக அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியும் தனது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததால், கமிட்டியின் காலத்தை சமீபத்தில் நீடித்தது திமுக அரசு. இந்தநிலையில் தான், வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை மே 31-க்குள் நடைமுறைப்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி.

கடிதம் போராட்டம் : இந்த கடிதத்தை தபால் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இப்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்புவதை ஒரு வேள்வியாக, ஒரு இயக்கமாக நடத்திட வேண்டும் என பாமகவினரையும் வன்னிய சமூகத்தினரையும் அன்புமணி வலியுறுத்தி வருகிறார். மே மாதத்திற்குள் 1 கோடி கடிதங்கள் முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் குவிய வேண்டும் என பாமகவில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.. பாமக முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்துக்கு திமுக என்ன பதிலை தரப்போகிறது என்று தெரியவில்லை.. அதேசமயம், திமுக தரப்போகும் அந்த பதிலை வைத்தே, பாமகவுடனான கூட்டணி விவகாரமும் கணிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!!
-
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications