Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவை நெருங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.. ஒண்ணுமே புரியலயே.. "பணியாத பன்னீர்".. இது எப்போ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் கர்நாடக தேர்தலை மிக சீரியஸாக அணுகி கொண்டிருக்கிறார்கள்.. மாநிலம் விட்டு மாநிலம் சென்று போட்டியிட உள்ளதால், இவர்களுக்கான ரிசல்ட் எப்படி இருக்க போகிறது? வாக்கு வங்கி எவ்வளவு கிடைக்க போகிறது? என்பது மிகப்பெரிய ஆர்வமாக கிளம்பி உள்ளது.

இப்போதைக்கு தென்மாநிலங்களிலேயே, கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக காலை பதித்துள்ளது.. ஆனால், இதுக்கே இப்போ திணறி கொண்டிருக்கிறது.. வரப்போகும் தேர்தல் காங்கிரசுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் வாழ்வா? சாவா? போராட்டம்தான்.

Can Edappadi Palaniswami, Panneerselvam prove their Vote Strength and What is BJP going to do

கர்நாடகத்தில் திமுகவை போலவே, அதிமுகவுக்கும் ஓரளவு ஆதரவு உள்ளது.. அதிலும் 15 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இதில், பெங்களூரு மாநகராட்சியில் அதிமுகவுக்கு 9 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்..

மொத்த கணிப்புகள்: இந்த ஆதரவுதான் பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது.. அதனால்தான் வெளிப்படையாகவே அதிமுகவின் ஆதரவையும் கேட்டது.. எடப்பாடியிடமே அமித்ஷா பேசியதாக தெரிகிறது. எடப்பாடியும் ஆதரவை தந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதிலும் ஓபிஎஸ், பாஜக கேட்காமலேயே, வலிய சென்று ஆதரவை தந்துவிடுவார் என்றும் நம்பப்பட்டது. ஆனால், மொத்த கணிப்புகளும் தகர்ந்து விழுந்துவிட்டன. எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும், பாஜகவையும் தாண்டி, தனித்தனியாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர்..

அசரலேயே ஓபிஎஸ்: மாறி மாறி வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.. சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்தபோதிலும்கூட, ஓபிஎஸ் எதற்கும் அசராமல், கர்நாடக தேர்தலில் மல்லுக்கட்ட ரெடியாகிவிட்டார்.. ஆனால், கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டுவிடக்கூடாது என்பதில் ஆரம்பத்தில் இருந்து உறுதியாக இருந்தது ஓபிஎஸ்தான்.. ஒருவேளை, அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்தால், அந்த கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் தடுப்பதற்கான முயற்சியில் ஓபிஎஸ் டீம் களமிறங்க போவதாகவும் செய்திகள் கசிந்தன.
அதுமட்டுமல்ல, அதிமுக போட்டியிடாமல், இந்த தேர்தலை புறக்கணிக்குமானால், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க, ஓபிஎஸ் அணியும் தயாரானதாக சொன்னார்கள்.. ஆனால், தனித்தனியாக இரு அணிகளுமே போட்டியிட போகிறார்கள்.. கர்நாடக தேர்தலில் இவர்கள் இருவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.. ஆனாலும், இவர்களின் பலம் என்ன என்பது "தனித்தனியாக" இதுவரை தமிழகமே அறிந்ததில்லை.. ஈரோடு இடைத்தேர்தலில்கூட, ஓபிஎஸ் போட்டியிடாததால், அவரது சொந்த பலம் அறிய முடியாமல் போயிற்று..

டிடிவி தினகரன் பலம்: தென்மண்டலங்களில் ஓபிஎஸ்ஸூக்கான சமுதாய வாக்குகள் இருப்பதாக நம்பப்படுகிறதே தவிர, அவருக்கான வாக்கு சதவிகித அளவு எவ்வளவு என்று உறுதியாக தெரியவில்லை.. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. இப்போதுகூட, தென்மாவட்டங்களில் 15 சதவீதம் வாக்கு வங்கியை டிடிவி தினகரன் வைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இவர்களின் தனித்தனி வாக்கு சதவீத பலம் எவ்வளவு என்பது தெரியாமலேயே உள்ளது..

அந்தவகையில், கர்நாடக தேர்தலில் இருவருமே தனித்தனியாக களமிறங்கியதால், இதன்மூலம் இவர்களின் சொந்த செல்வாக்கு எவ்வளவு என்பது ஓரளவு தெரிந்து கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது. ஓபிஎஸ்ஸூக்கு மூத்த தலைவர் புகழேந்தியின் ஆதரவு உள்ளதால், இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. இப்போது, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன... வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது..

இலை சின்னம்: ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ, இதற்கும் செக் வைத்துள்ளது.. கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இரட்டை சிலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அதனால், உண்மையான அதிமுக தாங்கள் தான் என நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டதை சுட்டிக்காட்டி கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தலைமை கடிதம் எழுதியுள்ளது.. ஏற்கனவே தங்களுடைய சின்னம், கொடியை, ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என்று எடப்பாடி தரப்பு வார்னிங் தந்து வரும்நிலையில், இப்போது அடுத்த பிரச்சனையை கிளப்பி உள்ளது..

தனிச்சின்னத்தில் போட்டியிடும் நிலையில் உள்ள ஓபிஎஸ், இதை எப்படி அணுக போகிறார்? என்று தெரியவில்லை.. ஆனால், தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பாஜகவோ, இவர்கள் 2 பேரின் அதிரடிகளை பார்த்து திகைத்து போயுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், வரும் 29-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச போகிறாராம்.. அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி விசிட்: சில நாட்களுக்கு முன்பு, அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா உறுதி செய்து பேட்டி தந்திருந்தபோது, எடப்பாடியும் அதை வழிமொழிந்திருந்தார்.. இதற்கு மறுநாளே, எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று, அமித்ஷாவை சந்திக்க போவதாக செய்திகள் கிளம்பின.. அதாவது, பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காகவே இந்த பயணம் என்றும் சொல்லப்பட்டது.. இப்போது, கர்நாடக தேர்தல் விவகாரத்தில், பாஜகவுக்கான அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடியின் இந்த டெல்லி விசிட் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+