Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா.. முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதை பார்ப்போம். தற்போதைய நிலையில் போலி பத்திரப்பதிவை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யலாம் என்ற தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 4ம் தேதி வரை நிறுத்தி வைத்திருக்கிறது.

சொத்துக்களின் உரிமையாளர்கள், வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் இருப்பார்கள்.. சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆள்மாறாட்டம் செய்து, போலியாக ஆவணங்களைத் தயாரித்து அந்த சொத்தை பத்திரப்பதிவு செய்துவிடுவார்கள். இதேபோல்
சில சொத்துக்கள் கூட்டுச்சொத்துக்களாக இருக்கும். அந்த சொத்தின் உண்மையான உரிமையாளரான முதியவர் அல்லது மூதாட்டி இறந்து போயிருப்பார். இந்த சூழலில் தங்களுக்கு தாத்தா எழுதிவைத்து உள்ளதாக கூறியும், இந்த சொத்து தங்களுக்கு சொந்தம் என்றும் சிலர் உரிமை கொண்டாடுவார்கள். இப்படிப்பட்ட மோசடிகள் தமிழ்நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சொத்து மதிப்பு மிகஅதிகமாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த நிலை அதிகமாக உள்ளது.

Can fake deed be cancelled or not What is the change brought about by the High Court order

இந்த சூழலில் சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் ஆள்மாறாட்டம் செய்து, போலியாக ஆவணங்களைத் தயாரித்து, முறைகேடாக பதியப்பட்ட பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்ட பதிவாளர்களே விசாரணை செய்து ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக பத்திரப்பதிவு சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.


இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மோசடி பத்திரப்பதிவுகள் தொடர்பாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கிறது. இதுவரை நடந்த விசாரணையின் படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் ரத்துசெய்யப்பட்டன. இதனிடையே புதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டையைச் சேர்ந்த வளர்மதி, திருச்செங்கோடைச் சேர்ந்த நித்யா பழனிச்சாமி, விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தார்கள்.


இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஜோதி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் வாதிடுகையில், 1908-ம் ஆண்டு இந்திய பதிவுச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில்', தமிழ்நாடு அரசு பிரிவு 77 ஏ மற்றும் 77 பி என்ற பிரிவுகளை சேர்த்து திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி போலியாக பதியப்பட்ட பத்திரங்களை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்யலாம். அதுதொடர்பான மேல்முறையீட்டை பத்திரப்பதிவுத்துறை தலைவர் விசாரிக்கலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் நீதித்துறை அதிகாரம் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சட்டப்படிப்பை படிக்காத அதிகாரிகள், எப்படி நீதி பரிபாலனம் செய்ய இயலும்? இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த உரிய விதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படவில்லை. வானளாவிய அதிகாரத்தை பதிவுத்துறைக்கு இந்த சட்டத்திருத்தம் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. சொத்துகளுக்கு சம்பந்தமில்லாத யாரோ ஒரு மூன்றாவது நபர் அளிக்கும் புகார் மீது நேரடி விசாரணை நடத்தாமல், மூன்று தலைமுறைகளுக்கு முன்னதாக பதியப்பட்ட பத்திரங்களைக்கூட மாவட்டப் பதிவாளர் ரத்துசெய்ய வழிவகை இருக்கிறது. விசாரணை நடத்துவதற்கான காலவரம்பும் நிர்ணயம் செய்யப்படாத நிலை இருக்கிறது,.

இந்த சட்டத்திருத்தம் காரணமாக ஒருவர் வாங்கும் சொத்தின் மீது நிலையற்ற தன்மை உருவாகி இருக்கிறது. இந்த சட்டத்திருத்தம் இயற்கை நீதிக்கு புறம்பாக உள்ளது. பதிவுத்துறையில் பல்வேறு முறைகேடுகளுக்கே இந்த சட்டதிருத்தம் வழிவகுக்க போகிறது. தற்போது 90 வயது ஆகும் மூதாட்டி பெயரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த சட்டப்பிரிவின் கீழ் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிற, எனவே, முறைகேட்டை உருவாக்கும் இந்த சட்டத்திருத்தத்தை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் " இவ்வாறு வக்கீல் ஜோதி வாதிட்டார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டு தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், “சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் பரிசீலித்தபோது இந்த சட்டதிருத்தத்தின்படி ஏராளமான புகார் அந்தந்த மாவட்ட பதிவாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக ஏப்ரல் 4-ந்தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும். அதுவரை இந்த சட்டத்திருத்தத்தை நிறுத்தி வைக்கிறோம்" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினார்கள்.

இதன் மூலம் போலி பத்திரப்பதிவை மாவட்ட பதிவாளர் ரத்து செய்யலாம் என்ற தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. போலி பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றால், முன்பு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். நீதிமன்றம் தான் சொத்துக்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு ரத்து செய்து வந்தது. அதேநேரம் போலி ஆவணங்கள் மூலம் திருட்டுத்தனமாக மோசடி செய்து நிலத்தை அபகரித்தால், போலீசில் புகார் அளித்தாலே, உரிய சட்ட நிவாரணம் கிடைக்கும். ஆனால் சொத்தில் பங்கு உள்ளது. ஆனால் சொத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. சொத்தில் சட்ட ரீதியான உரிமை இருவருக்குமே ஏதோ ஒருவகையில் உள்ளது என்றால், அதனை நீதிமன்றத்தில் தான் தீர்க்க முடியும். அதேநேரம் போலி பத்திரங்களை ரத்து செய்ய நிச்சயம் முடியும். அதனை மாவட்ட பதிவாளர் செய்வாரா அல்லது நீதிமன்றம் வரை வரவேண்டுமா என்பதை அறிய ஏப்ரல் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+