அஸ்திவாரமே அசையுது.. பாஜக "மாஸ்டர் ப்ளானை" முந்தும் "பிரபலம்".. விழிக்கும் எடப்பாடி.. ஈரோட்டில் புயல்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடக்க போகிறது.. இந்த கூட்டத்துக்கு முன்பாகவே, பலரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறார் தாமாக தலைவர் ஜிகே வாசன்.. என்ன நடந்தது?
வாசனை பொறுத்தவரை, பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்.. குறிப்பாக, பிரதமர் மோடியின் குட்புக்கில் இடம்பெற்றவர்.. ஏற்கனவே 2 முறை எம்பி பதவி தருவதாக பாஜக மேலிடம் சொல்லியும், அதை அன்புடன் நிராகரித்தவர் வாசன்..

நிர்வாகிகள்: இந்த முறை 3வது முறையாக எம்பி பதவியை தரப்போவதாக மீண்டும் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.. எனவே, வாசனும், தன்னுடைய நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, பாஜகவுடன் தமாகாவை இணைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக சலசலக்கப்பட்டது.
இதெல்லாம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே வெளிவந்த தகவல்கள். எனினும், வாசனுக்கு எம்பி பதவியை தர வேண்டும் என்பதில் மேலிடம் உறுதியாக இருக்கிறது.
அன்புமணி: இந்நிலையில்தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் வருகிற 18-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கூட்டத்துக்கு முன்பாக, காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நாளை [ஜூலை 15] ஈரோட்டில் தமாகா சார்பில் பொதுக்கூட்டம் நடத்துகிறார் வாசன்.
இந்த கூட்டத்தை ஒரு மாநாடு மாதிரி நடத்த வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளாராம்.. காரணம், சில அரசியல் கணக்குகளை போட்டு வைத்திருக்கும் வாசன், ஈரோட்டில் நடத்தப்படும் கூட்டத்தின் பிரமாண்டத்தின் வாயிலாக டெல்லிக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாராம்.
அதாவது, தமிழகத்தில் காங்கிரசை விட தமாகா தான், அதிக தொண்டர்கள் நிறைந்த கட்சி. காங்கிரசில் தலைவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள், தொண்டர்கள் இல்லை. திமுக கூட்டணியில் இருப்பதால் அந்த கட்சிக்கு இமேஜ் கிடைத்துள்ளது அவ்வளவுதான். மற்றபடி தொண்டர்கள் மொத்தமும் தமாகாவில் தான் இருக்கின்றனர் என்பதை தமிழகத்துக்கும் டெல்லிக்கும் வெளிப்படுத்தவே இந்த கூட்டத்தை, மாநாடு மாதிரி பிரமாண்டப்படுத்த திட்டமிட்டு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறாராம்.
புலம்பல்கள்: ஆனால், மாவட்ட நிர்வாகிகளோ, தொண்டர்களையும் மக்களையும் வாசனின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப திரட்டுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இது குறித்த புலம்பல்களும் நிறையவே தமாகாவில் கேட்க முடிகிறதாம்.
இதற்கிடையே, தமாகா கூட்டத்தை பிரமாண்டமாக காட்டி டெல்லிக்கு உணர்த்த வேண்டிய தேவை என்ன? என்பது பற்றி அக்கட்சி வட்டாரங்களில் விசாரித்தோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னபோது, "தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு போகிறார் வாசன் தலைவர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் கையோடு, மத்திய அமைச்சர் பதவியை கேட்டு பிரதமரிடம் பேசவிருக்கிறார்.
அமைச்சர் பதவி: அமைச்சர் பதவிக்கான உறுதி மொழியை வாங்கிக் கொண்டுதான் சென்னைக்கு திரும்ப வேண்டும் என்று கட்சியின் மாநில நிர்வாகிகளும் தலைவரின் குடும்பமும் வாசனிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கின்றனர். அதனால், தமிழகத்தில் தமாகா எழுச்சியுடன் இருக்கிறது என்பதை பாஜக தலைமைக்கு காட்டத்தான் கூட்டத்தை பிரமாண்டப்படுத்த நினைக்கிறார்.
அப்படி பிரமாண்டப்படுத்தினால் தான், நாடாளுமன்ற தேர்தலில் வாசனை தங்கள் கூட்டணியில் வைத்துக்கொள்ள பாஜக விரும்பும். வலிமை இருப்பது தெரிந்தால் தானே தமாகா வாக்குகள் பாஜகவுக்கு தேவை என பாஜக தலைமையும் நினைக்கும். அந்தவகையில், வாசனை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் ஆலோசிப்பார்கள். இந்த அரசியலை மையப்படுத்தித்தான் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார் வாசன்" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் தமாகாவினர்.
மாநாடு: எம்பி சீட் கொடுக்கிறேன் என்று டெல்லி சொன்னதுமே, பாய்ந்து போய் வாங்கிக்கொள்ளாமல், அதை 3 முறை அன்புடன் நிராகரித்தவர் வாசன்.. இந்த முறையும் சீட் தருவதாக சொல்லிவரும்நிலையில், தன் கட்சியின் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று, வாசன் எடுத்துக்கொள்ளும் இந்த மாநாட்டின் முயற்சி, பலரையும் கவனிக்க வைத்துள்ளது. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications