இரண்டாக உடையுதா தஞ்சாவூர்? கும்பகோணம் பக்கம் "திரும்பிய" ஜி.கே. வாசன்.. பாஜகவுடன் தமாகா அதே பார்முலா
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அது என்ன?
தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளின் தலைவர்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவர் ஜிகே வாசன்.. அந்தவகையில் பிரதமர் மோடியின் அபரிமிதமான நம்பிக்கையையும் பெற்றவர்.

எனவேதான், கடந்த தேர்தல்களின்போதெல்லாம், வாசனுக்கு எம்பி சீட்டை தருவதாக பாஜக மேலிடம் கூறிவந்தது.. ஆனால், ஜிகே வாசனோ அவைகளையெல்லாம் மறுத்து வந்தார்.. இந்த முறை மீண்டும் அதே கோரிக்கையை பாஜக தலைவர்கள் முன்வைக்கவும், நிஜமாகவே வாசன் குழம்பி விட்டார்.
சமாதானம்: அதிமுகவுடன் கூட்டணி வைப்பதா? பாஜகவுடன் கூட்டணி வைப்பதா? என்று முடிவுசெய்ய முடியாமல் இருந்தார்.. இரு தரப்பையும் சமாதானம் செய்ய எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், இறுதியில் பாஜகவுடனேயே தமாகா கூட்டணி என்று அறிவித்துவிட்டார். ஆனால், இதைக்கேட்டு தமாகா நிர்வாகிகளே அதிர்ச்சியாகிவிட்டார்களாம்.
பாஜகவை காலம் காலமாக கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் தமாகா, பாஜகவுடனேயே இணைந்து கொள்வதா? என்று தமாகா நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்ததுடன், தமாகாவின் தலைமை நிலைய செயலாளர் டி.என். அசோகன் தன்னுடைய பதவியை ராஜினாமே செய்துவிட்டு போய்விட்டார்.. எனினும், தங்களுக்கு 3 சீட்டுகள் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு பெற்றார் வாசன்.
மோசமான நிலைமை: ஓபிஎஸ், தினகரன் போன்றோருக்கெல்லாம் 1 சீட் மட்டுமே தந்தநிலையில், வாசன் 3 சீட்டை வாங்கி, மூன்றிலுமே தோற்றுப்போனார்.. அதிமுகவுடன் தமாகா கைகோர்த்திருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்று தமாகா நிர்வாகிகளே புலம்பி தள்ளியதாகவும் செய்திகள் கசிந்தன..
ஆனால், தேர்தல் ரிசல்ட்டுக்கு முந்தின நாள்வரை, "எக்ஸிட் போலில் சொல்லியிருப்பதைவிட, பாஜக கூட்டணி இன்னும் அதிகமான வெற்றியை பெறும்" என்று சொல்லி கொண்டேயிருந்தார் வாசன்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் பாஜக கூட்டணி செய்த தேர்தல் பணிக்கு, தமிழக மக்கள் நல்ல அங்கீகாரம் கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்து கொண்டேயிருந்தார் வாசன்.
பாஜக கூட்டணி: தேர்தல் முடிவுக்கு பிறகும்கூட, "நாட்டின் நலன் கருதி பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் நீடிக்கும்" என்று வாசன் கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
இப்போது விஷயம் என்னவென்றால், வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தன்னுடைய நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
வாசன் பேசும்போது, "பாராளுமன்ற தேர்தலில் 23 இந்தியா கூட்டணிகள் சேர்த்து பெற முடியாத மத்திய ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை என கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைந்துள்ளது. மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது.
நம்பிக்கை: வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம்.
பாஜக: அந்த சதவீதத்தின் அடிப்படையிலே பா.ஜனதா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் தொடர்புடைய உழைப்பை நான் பாராட்டுகிறேன். இந்த சதவீதம் என்பது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நிச்சயமாக எங்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதனை நோக்கியே எங்களது பயணம் அமையும்" என்று வாசன் தெரிவித்துள்ளார்.
2026ல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி தன்னுடைய பயணத்தை தமாகா துவங்கியிருப்பதும், இதை மையப்படுத்தி கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்திருப்பதும், ஒட்டுமொத்த காங்கிரஸ்காரர்களின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications