மூலப்பத்திரம் இல்லை என்றாலும், போலீஸ் சான்று இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாமா? கோர்ட் தீர்ப்பு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூலப்பத்திரம் இல்லை என்றாலும் அல்லது காணாமல் போன மூலப் பத்திரம் கிடைக்கவில்லை என்று காவல் நிலையத்தில் சான்று ஆகியவை இல்லாவிட்டாலும், பத்திர நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு பத்திரப்பதிவு செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தீர்ப்பு அளித்திருந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து பலரும் மூலப்பத்திரம் தொலைந்தால் நகலை வைத்து பத்திரப்பதிவு செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பப்பு என்பவர் ராசிபுரம் சார் பதிவாளருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு என்ன தீர்ப்பளித்தது. ஏன் மூலப்பத்திரம் குறித்து விவாதங்கள் அதிகமாக உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

deed patta tamil nadu

நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பு என்பவர் தனது மூதாதையர் சொத்தை தன் பெயரில் இருந்து தனது சகோதரர் பெயருக்கு மாற்றுவதற்கு மூலப்பத்திரம் இல்லை என பதிவு செய்ய ராசிபுரம் சார்பதிவாளரை அனுகியுள்ளார். ஆனால் ராசிபுரம் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். அதே நேரம் அதே சார்பதிவாளர் அலவலகத்தில் ஏற்கனவே பெறப்பட்ட மூலப்பத்திரத்தின் நகலையும் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து மூலப்பத்திரத்தின் நகலை ஏற்க உத்தரவிட வேண்டும் என்று பாப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியம், சக்திவேல் அமர்வு விசாரித்து கடந்த அக்டோபரில் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின் விவரம்..

மூலப்பத்திரம்: வழக்கமாக ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவுக்கு சட்டப்படி மூலப்பத்திரம் வேண்டும். மூலப்பத்திரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்ற ஜெராக்ஸ் நகல் இருக்க வேண்டும்.. அதுவும் இல்லாவிட்டால் போலீசில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து, அதற்கு போலீசார் அளித்த சான்று இருக்க வேண்டும் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மூலப்பத்திரம், அல்லது மூலப்பத்திரம் கிடைக்கவில்லை என்ற போலீஸ் சான்று ஆகிய இரண்டும் இல்லாவிட்டாலும், பத்திரத்தின் நகலை அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து பதிவு செய்ய வேண்டும், அனைத்து ஆவணங்களும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும் என்பதால், அதனை ஒப்பிட்டுப் பார்த்து மனுதாரரின் சொத்து மாற்ற பத்திரத்தை ராசிபுரம் சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறோம்" என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

பத்திரப்பதிவு: இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வழக்கிலும் இதே தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றம் சில மாதம் முன்பு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விகேபுரத்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பருக்கு சொந்தமாக அம்பை தாலுகா சிவஞானபுரம் வடக்குத் தெருவில் இரு சர்வே எண்களில் இரு நத்தம் நிலங்கள் இருக்கிறது. இந்த சொத்துக்கள் அவரது தந்தை கடந்த 29.6.1998ல் தானமாக கொடுத்தவை ஆகும். இந்த சொத்தை அவரது மனைவி பெயருக்கு மாற்றம் செய்வதற்கு வி.கே.புரம் சார்பதிவாளரை அணுகியிருக்கிறார். அப்போது மூலபத்திரம் அசல் தாக்கல் செய்யவில்லை என்பதால் பத்திரபதிவிற்கு மறுத்ததுடன் காவல்துறையில் மூலபத்திரம் தொலைந்ததற்கான சான்று வாங்கிவந்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று சார்பதிவாளர் திருப்பி அனுப்பியிருந்தார்.

சார் பதிவாளர்: இதனால் மூலபத்திரத்தின் நகலை வைத்து சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்திட உரிய உத்தரவிட வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் அலெக்ஸாண்டர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவின் விவரம்: ஒருவர் பத்திரபதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவுக்கு சட்டப்படி மூலபத்திரம் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை மூலபத்திரம் இல்லாவிட்டால் சார் பதிவாளர் போலீசில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து அதற்கு போலீசார் சான்று அளிக்க வேண்டும் .

போலீஸ் சான்று: ஆனால் அதனை அளித்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. எல்லா நேரங்களிலும் போலீஸ் சான்று தேவை என கூறுவது முறைகேடான வழியில் சான்று பெறுவதை ஊக்குவிக்கும். போலீஸ் சான்று பெறுவதில் ஏற்படும் செலவு மற்றும் சிக்கல்களால், வெளிமாநிலங்களில் இருந்து சான்றுகள் வருவது அதிகரித்துள்ளதாக ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே அசல் மூலஆவணம் மற்றும் போலீஸ் சான்று இல்லாவிட்டாலும் நகலை ஒப்பிட்டுபார்த்து பத்திரபதிவு செய்யவேண்டும்.

நகல் மூலப்பத்திரம்:
அனைத்து ஆவணங்களும் பத்திரபதிவு அலுவலகத்தில் இருக்கும் என்பதால் அதனை மட்டுமே ஒப்பிட்டு பத்திரபதிவு செய்ய வேண்டும். அசல் மூல ஆவணம் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் மனு தாரரின் பத்திரத்தினை பதிவு செய்ய மறுத்தது தவறானது. ஆகவே மனு தாரரின் பத்திரத்தினை ஒருவார காலத்திற்குள் பதிவு செய்யவேண்டும். அதற்கு மூலப்பத்திரத்தை கேட்காமல் பதிவாளர் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.

எனவே மூலப்பத்திரம் இல்லாவிட்டாலும், மூலப்பத்திரம் காணாமல் போனதாக போலீஸ் சான்று இல்லாவிட்டாலும் பத்திர நகலை சார்பதிவாளர் அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டு பத்திரப்பதிவு செய்ய முடியும் என்று ரியல் எஸ்டேட் தொடர்புடைய பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதுபற்றி முழு தகவல்களை அறிய வழக்கறிஞர்கள் அல்லது சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகி பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+