விஜய்க்கு போட்டியே அவருடைய மகன் தானா? ஒரே நேரத்தில் சம்பவம்.. ரசிகர்களை அதிரவைத்த தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் இரண்டு பெயர்கள் என்றால் அது விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தான். ஒருவர் அரசியலில் முதலமைச்சராக பிஸியாக இருந்தாலும், அவரது கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' குறித்து ரசிகர்கள் இன்னும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் ஜேசன் சஞ்சயின் சினிமா பயணம் குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் சில தகவல்களை வலைப்பேச்சு அந்தணன் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து அவர்கள் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Jana nayagan Vijay CM Vijay Jason Sanjay Sigma

ஜனநாயகன் ரிலீஸ்

பல மாதங்களாக 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது ஜூன் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கான இறுதி பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என கூறப்படுகிறது.

முக்கியமாக தணிக்கை சான்றிதழ் தொடர்பான நடைமுறைகளே தற்போது தயாரிப்பு தரப்புக்கு தலைவலியாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்தால் மட்டுமே ஜூன் 26 ரிலீஸ் சாத்தியம் என கூறப்படுவதால் ரசிகர்கள் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதற்கிடையில் விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பாரா என்ற விவாதமும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அரசியலுக்கு வந்த பிறகு ஊடகங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தும் தொடர்ந்து எழுந்து வருகிறது. அதேபோல் ஜேசன் சஞ்சய் எப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அப்பா மகன் போட்டி

விஜய்யின் அரசியல் பயணம் ஒரு பக்கம் பேசப்பட்டுக் கொண்டிருக்க, ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனால் ஒரு வேலை ஜனநாயகன் மற்றும் சிக்மா இரண்டு படமும் ஒரே நேரத்தில் வெளியானால் அப்பா மகனுக்கு தான் போட்டியே என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிக்மா படத்தின் ப்ரமோஷனில் சஞ்சய் என்ன பேசுவார்? விஜய் பற்றிய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார் என்ற கேள்விகளும் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

அதேநேரத்தில் கோலிவுட்டில் மற்றொரு பெரிய விவாதமாக 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாறியுள்ளது. முதலில் வெளியான தகவல்கள் ஒன்றாக இருந்த நிலையில், தற்போது பல்வேறு தேதிகள் பேசப்படுவதால் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் தங்களது திட்டங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குழப்பத்தில் பிற நடிகர்கள்

அதன் தாக்கம் சூரி, சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களின் வெளியீட்டு திட்டங்களிலும் எதிரொலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பெரிய படத்தின் ரிலீஸ் தேதி மாறினாலே மற்ற படங்களின் கணக்குகளும் மாறிவிடும் என்பதற்கான உதாரணமாக இதை சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கிடையில் அதர்வாவின் 'இதயம் முரளி', விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2', விக்ரம் - ஆனந்த் சங்கர் கூட்டணி படம் உள்ளிட்ட பல படங்களின் அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆனால் தற்போது கோலிவுட்டில் அதிகம் பேசப்படுவது ஒன்றே ஒன்று தான். "முதல்வர் விஜய்யின் கடைசி படம் எப்போது வெளியாகும்?" என்பதும், "ஜேசன் சஞ்சயின் அடுத்த நகர்வு என்ன?" என்பதும்தான். அப்பாவும் மகனும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும், இருவரையும் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+