பெங்களூர் பெயர் மாறுகிறதா..? வெளியானது முக்கிய தகவல்.. ஏன் இந்த திடீர் மாற்றம்..?

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அதாவது ஐடி துறையின் வளர்ச்சியை நிர்ணயித்த நகரம் பெங்களூரு. இன்று அதே நகரம், செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சியின் மையமாக உருவெடுத்து வருகிறது.

ஆனால் இந்த மாற்றத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், AI இனி சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தனிப்பட்ட திறனாக இருக்காது. அனைவருக்குமான ஒரு ஏணிப்படியாகவும், திறனாகவும் இருக்கும். உதாரணமாக மனிதவள மேலாண்மை முதல் மார்க்கெட்டிங் வரை, கல்லூரி ஆசிரியர்கள் முதல் நிதி நிபுணர்கள் வரை, தொழில்நுட்ப பின்னணி இல்லாதவர்களும் AI கற்றுக்கொண்டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

Bengaluru AI Bengaluru AI capital India AI workforce report AI upskilling India non-technical AI learners Tier 2 cities AI women in AI careers AI jobs beyond software Bengaluru AI talent Scaler AI report 2026 AI career opportunities India AI AI workforce report AI upskilling AI 2 AI AI AI AI Scaler AI 2026 AI

பெங்களூர் பெயர் மாற்றம்

Scaler வெளியிட்டுள்ள "India AI Workforce Report 2026" அறிக்கையின்படி, இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்பவர்களில் 19 சதவீதம் பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் இந்தியாவின் AI திறன் மையமாக பெங்களூரு ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஐடி கேப்பிடல் என அழைக்கப்பட்ட பெங்களூர் இனி ஏஐ கேப்பிடலாக மாறும்.

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக புனே, ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் AI கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான முக்கிய மையங்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, சென்னை AI சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.

இனி AI என்பது இன்ஜினியர்களுக்கானது மட்டுமல்ல

இந்த அறிக்கையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், AI கற்றுக்கொள்பவர்களில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் பேர் தொழில்நுட்பம் சாராத துறைகளில் இருந்து வருவதாகும். இது AI திறன்கள் மென்பொருள் துறையைத் தாண்டி பல்வேறு தொழில்களில் அவசியமானதாக மாறி வருவதை காட்டுகிறது.

தற்போது AI திறன்கள் நிர்வாக பணிகள், ஆலோசனை சேவைகள், நிர்வாகம், நிதி மேலாண்மை, மார்க்கெட்டிங், மனிதவள மேலாண்மை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் சம்பள வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு

AI துறையில் பெண்களின் பங்கேற்பும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. மனிதவள மேலாண்மை, மார்க்கெட்டிங், கல்வி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் பெண்கள் AI சார்ந்த திறன்களை கற்றுக்கொண்டு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

இதன் மூலம் AI என்பது வெறும் தொழில்நுட்ப திறன் அல்ல, பல்வேறு துறைகளில் பயன்படுத்தக்கூடிய பொதுவான பணியிடத் திறனாக மாறி வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாம் நிலை நகரங்களின் எழுச்சி

இந்தியாவின் AI வளர்ச்சியில் மற்றொரு முக்கிய மாற்றம், மெட்ரோ நகரங்களின் ஆதிக்கம் குறைந்து வருவது தான். தற்போது AI கற்றுக்கொள்பவர்களில் ஐந்தில் ஒருவர் 2ஆம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

லக்னோ, ஜெய்ப்பூர், பாட்னா, இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில் இருந்து AI கற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் AI திறன்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு மட்டும் கட்டுப்பட்டவை அல்ல என்பதும் தெளிவாகிறது.

இதேபோல் ஏஐ அனைத்து தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் உடைத்து வருகிறது.

ஏஐ வளர்ச்சி

AI தற்போது ஒரு தனிப்பட்ட தொழில்நுட்ப திறனாக இல்லாமல், அனைத்து துறைகளையும் பாதிக்கும் அடிப்படை பணியிடத் திறனாக மாறிவிட்டதாக கூறுகிறது.

அதனால்தான் இன்று இந்தியாவின் IT தலைநகரமாக அறியப்படும் பெங்களூரு, நாளைய AI தலைநகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களும் இந்த மாற்றத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை வழிநடத்த தயாராகி வருகின்றன.

AI திறனை யார் வேகமாக கற்றுக்கொள்கிறார்களோ, எதிர்கால வேலை சந்தையில் அவர்களுக்கே அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதே இந்த அறிக்கையின் முக்கிய செய்தியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+