Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய குடும்ப அட்டை வந்தாச்சு.. அடுத்து மகளிர் உரிமை தொகை பெற உடனே விண்ணப்பிக்க முடியுமா? பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்தாச்சு என்று எஸ்எம்எஸ் போய் இருக்கிறது. இதனால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்பதை பார்ப்போம்.

இந்தியாவிலேயே எங்குமே இல்லாத திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது. அந்த திட்டம் தான் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்... கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்..

Can new ration card holders apply for kalaignar magalir urimai thogai immediately

இந்த திட்டத்தில் பயளானிகள் தேர்வு என்பது ரொம்ப சிம்பிள்... ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரும் வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது.. அடுத்ததாக யார் பெயரிலும் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கக்கூடாது.. விண்ணப்பிக்கும் மகளிர் 21 வயது நிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த மூன்று தகுதியையும் ஆன்லைனிலேயே தமிழக அரசு கண்டுபிடித்துவிடுகிறது. அதற்கு என்று சாப்ட்வேர் வைத்திருக்கும் அரசு, விண்ணப்பிங்களை எளிதாக கண்டுபிடித்து நிராகரித்து விடுகிறது.. மற்ற அனைவருக்கும் பெரும்பாலும் மகளிர் உரிமை தொகை கிடைத்து வருகிறது. மாதம் ஆயிரம் உரிமை தொகையை சுமார் ஒரு கோடியே 8 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பெற்று வருகிறார்கள்..

இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அதுவரை ஒரே குடும்பமாக இருந்த பலர், தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.. அதேபோல் புதிதாக திருமணம் ஆனவர்களும், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்க தொடங்கினார்கள். இதனால் பெரிய அளவில் விண்ணப்பங்கள் அப்போது குவிந்தது. இதையடுத்து அரசு தற்காலிகமாக விண்ணப்பங்களை நிறுத்தி வைத்தது. இதனிடையே சரியாக ஓராண்டுக்கு பின்னர் தற்போது பலருக்கும் ரேஷன் கார்டு வந்தாச்சு என்று எஸ்எம்எஸ் பறந்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில சுமார் 45 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டு வந்துள்ளதாக அரசு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது. . இவர்கள் புதிய ரேஷன் அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தாங்களோ, தங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனுமோ சென்று பெற்றுக் கொள்ள முடியும்.

இதுபற்றி தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் செவ்வாய் கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பொது வினியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை ரேஷன் கடைகள் வாயிலாகப் பெற்று பயனுறும் வண்ணம் புதிய ரேஷன் கார்டுகள் தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 7.5.2021 முதல் 30.6.2023 வரையில் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

நடப்பில் உள்ள குடும்ப அட்டைகள் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் பயனாளிகள் எண்ணிக்கையை சமநிலையில் வைக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் வினியோகம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இடையிலேயே 27 ஆயிரத்து 577 ரேஷன் கார்டுகள் வழங்கி இருக்கிறோம்.

இது ஒருபுறம் எனில், ஏற்கனவே பெறப்பட்ட பல ஆயிரம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45 ஆயிரத்து 509 புதிய ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்படுகிறது. மேற்கண்ட 45 ஆயிரத்து 509 பேருக்கும் அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு எம்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் புதிய ரேஷன் அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தாங்களோ, தங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனுமோ பெற்றுக் கொள்ளலாம்.. அப்படி ரேஷன் அட்டை வாங்கியவர்கள் நேராக கடைகளுக்கு சென்று, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின்னர் ரேஷன் கடையில் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்" என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வந்தவர்கள் அடுத்த சில நாட்களில் தாசில்தார் ஆபிஸில் போய் வாங்கி கொள்ள முடியும் என்கிற நிலையில், அடுத்ததாக அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கவே ஆர்வம் காட்டுவார்கள். புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு நிச்சயம் விண்ணப்பிக்க முடியும். அரசு அனேகமாக புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க விரைவிலேயே அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-25ம் நிதியாண்டில் 13720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. தற்போது ஒரு கோடியே 8 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறும் நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 7 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்க முடியும். எனவே சுமார் 7 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பதால், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது. எனவே புதிதாக குடும்ப அட்டை வாங்கும் பலருக்கும் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+