Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஸ்திவாரமே அசையுது.. மீண்டும் மீண்டும் ஓபிஎஸ்.. உடனே வந்த முனுசாமி.. ஓஹோ, இதுல இவ்ளோ இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக சொல்லி உள்ளார்.. இது சாத்தியமா?

கடந்த முறை தேர்தலில் அமமுக தினகரன் பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது..
அமமுக ஓட்டுக்கள்: திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை.. அதனால்தான், இந்த முறை தேர்தலில் தினகரனுக்கு 2 சீட்களை ஒதுக்க அதாவது, சிவகங்கை, திருச்சியை அமமுகவுக்கு ஒதுக்க பாஜக யோசித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Can O Panneerselvam get Two leaves symbol and what did ADMK KP Munusamy say about OPS

குறைந்தது 10 சீட்டுக்களையாவது அமமுக எதிர்பார்த்ததாக தெரிகிறது.. ஆனால், வெறும் 2 சீட்களை மட்டுமே ஒதுக்கி தாமரை சின்னத்தில் போட்டியிட சொன்னதாகவும், இதற்கு தினகரன் மறுத்துவிட்டாராம்.. மேலும், குக்கர் சின்னத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதிலும் அமமுக தீவிரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இரட்டை இலை: தினகரன் நிலைமை இப்படியென்றால், ஓபிஎஸ் தனக்கு இரட்டை இலை கிடைப்பதில் உறுதியாக உள்ளார். ஆனால், இலை சின்னம் கிடைப்பது அவ்வளவு எளிதாகிவிடுமா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஒரு சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக வழங்கப்பட்டதை ஓபிஎஸ் சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அப்போதைய சூழ்நிலை வேறு.. அப்போதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தபோது தேர்தல் ஆணையம் 2 தரப்பிடமும் கேட்டுத் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியது.

ஓபிஎஸ் எதிர்ப்பு: அப்போது ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. அதைதொடர்ந்து தற்காலிகமாக பயன்படுத்தும் உரிமை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது..

இனிமேல் மூல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்து இடைக்கால தடை வாங்கலாம் என்று ஓபிஎஸ் கருதலாம். அப்படியே கருதினாலும் 2 தரப்புக்கும் சாதகமாகவே இருக்கும்.. அதனால், ஓபிஎஸ்ஸுக்கு இலை கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று ஷ்யாம் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

தாமரை சின்னம்: ஆனால், பாஜகவுடன் இணைந்து, தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், எப்படியும் ஓபிஎஸ் தரப்புக்கு தாமரை சின்னத்தையே ஒதுக்கி பாஜக போட்டியிட வைக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வட்டமடித்தன.

அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டால், அதை மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்பாரா? அல்லது ஓபிஎஸ் தரப்பிலிருக்கும் அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், தாமரை சின்னத்தை ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்க நேர்ந்தால், இதுவே எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரியாக வெற்றியாக பார்க்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.

சிக்கல்கள்: சின்னம் தொடர்பான சிக்கல்கள் ஒருபக்கமிருக்க, ஓபிஎஸ்ஸுக்கு 3 சீட்களை ஒதுக்க பாஜக முடிவு செய்திருக்கிறதாம்.. அதாவது, தேனி, மதுரை, தஞ்சாவூர் தொகுதிகள் தற்சமயம் ஓகே ஆகியிருக்கிறதாம்.. இதுபோக ராஜ்ய சபா சீட்டையும், ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்க போவதாக தெரிகிறது. இந்த தேர்தல் சொதப்பிவிட்டாலும், ராஜ்ய சபா சீட்டில் மகனை டெல்லிக்கு அனுப்ப பிளான் செய்கிறாராம்.

ஆக மொத்தம், பாஜகவின் முடிவின்படி, ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்கும் 3 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளராகவே, தாமரையில் தன்னுடைய ஆதரவாளர்களை ஓபிஎஸ் களமிறக்கலாம் என்கிறார்கள் தென்மண்டல புள்ளிகள்..

குழப்பம்: ஆனால், ஓபிஎஸ்ஸோ, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் என மொத்தத்தையும் பயன்படுத்த சென்னை ஹைகோர்ட் தடை விதித்திருக்கிறது என்று தெரிந்தும்கூட, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக சொல்லியிருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

"அனைத்து நீதிமன்றங்களும் எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தான் இரட்டை இலை சின்னம் என்று தீர்ப்பு வழங்கியும்கூட, அந்த தீர்ப்புக்கு பிறகும் ஓபிஎஸ் உளறி கொண்டிருக்கிறார் என்றால் யாரை ஏமாற்று நினைக்கிறார்? என்பது அவருக்கு தான் தெரியும்‌" என்று மூத்த தலைவர் கேபி முனுசாமி கேள்வி எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.. என்னதான் நடக்க போகிறது?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+