"சக்ஸஸ்" எடப்பாடிக்கே.. சொல்லியடித்த "பவர்புல்" பழனிசாமி.. சறுக்கிய பன்னீர்..இது மட்டும்தான் சாய்ஸ்?
சென்னை: அதிமுக பொதுச்செயலராக பழனிசாமியை, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளதையடுத்து, மிகப்பெரிய பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.. இது ஓபிஎஸ்ஸூக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்து வருகிறது.
கர்நாடகத்தில் அதிமுகவுக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.. அதிலும் 15 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இதில், பெங்களூரு மாநகராட்சியில் அதிமுகவுக்கு 9 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்.. இந்த ஆதரவுதான் பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது..
இப்போதைக்கு தென் மாநிலங்களில் பாஜ ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான்.. அதனால், கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக உள்ளதால், அதிமுகவின் ஆதரவை கேட்டு வருகிறது..

பழனிசாமி: அதிலும் அதிமுக பெரும்பாலும், எடப்பாடியிடம் உள்ளதால், அவரிடமே அமித்ஷா பேசியதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பாஜவுக்கு ஆதரவு தருவதை பற்றி எதுவுமே சொல்லாமல், அதிமுகவுக்கும் சீட் தரவேண்டும் என்று கேட்டு வந்தார். பாஜகவினருக்கே சீட் கொடுக்க முடியாமல் திணறி வரும்நிலையில், அதிமுகவுக்கு சீட் எப்படி கொடுப்பது என்று மேலிடம் திகைத்தது.. எனவே, ஆதரவு மட்டுமே வேண்டும் என்று அதிமுகவிடம் சொல்லிவிட்டது..
கர்நாடகா தேர்தல்: இதையடுத்து, புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்றும் வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.. 15 தொகுதிகளில் உள்ள தமிழர்களின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்றுதான் அதிமுக நினைக்கிறதாம்.. பாஜகவுக்கு வெறுமனே ஆதரவை மட்டுமே தந்துவிட்டு, ஒதுங்கி கொள்ளவும் அதிமுகவுக்கு மனசு வரவில்லை என்கிறார்கள்.
இதற்காகத்தான், இதை பற்றி உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் தம்பிதுரையை அனுப்பி பேசவைத்தும் பலனளிக்காத காரணத்தினதால்தான், இப்படி பாஜகவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார். இதனால் அதிமுக- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்க துவங்கி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: ஆனால், எடப்பாடி பழனிசாமி கர்நாடக தேர்தலில் போட்டியிட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஓபிஎஸ்.. அதாவது, கர்நாடக சட்டசபை தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்தால், அந்த கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் தடுப்பதற்கான முயற்சியில் ஓபிஎஸ் டீம் களமிறங்க தயாராகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.. ஒருவேளை அதிமுக போட்டியிடாமல், தேர்தலை புறக்கணிக்குமானால் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க, ஓபிஎஸ் அணி ரெடியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.. ஆனால், திடுதிடுப்பென்று ஓபிஎஸ்ஸூம் கோதாவில் குதித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ்ஸூம் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கர்நாடக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் நிறுத்தப்படுகிறார் என்று அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். பிறகு, 3 இடங்களில் போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.. கர்நாடகாவில் மூன்று தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது..

அறிவிப்பு: புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனும், கோலார் தங்க வயல் பகுதியில் அனந்த ராஜ்ஜும், காந்தி நகர் தொகுதியில் குமாரும் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... கர்நாடகாவைப் பொறுத்தவரை ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக கட்சிக்கு கர்நாடகாவிலும் நிர்வாகிகள் இருந்துவருகின்றனர்... ஓபிஎஸ் இப்படி அறிவிக்க காரணம், மூத்த தலைவர் புகழேந்திதான் என்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, தினகரனை ஆதரித்த அவர், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.
இப்போது அவர், ஓபிஎஸ் அணியில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை தீவிரமாக எதிர்த்தும் வருகிறார்.. பெங்களூருவில் தீவிர அரசியல் பணி செய்த அனுபவம் அவருக்கு உள்ளதால், நிச்சயம் ஓபிஎஸ்ஸுக்கு உதவக்கூடும் என்கிறார்கள்.. அதனால்தான், ஓபிஎஸ் இவ்வாறு 3 தொகுதிகளில் போட்டி என்பதை அறிவித்ததாக சொல்கிறார்கள். ஆனால், ஓபிஎஸ்ஸின் இந்த முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை.. இப்போது எடப்பாடி + ஓபிஎஸ் என மாறிமாறி வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
க்ளைமேக்ஸ்: இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.. ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.. இந்த முடிவானது, ஓபிஎஸ்ஸூக்கு பெருத்த பின்னடைவை தந்துள்ளது.. மீண்டும் சட்டப்போராட்டத்தை கையில் எடுக்க போகிறாரா? என தெரியவில்லை.. இந்த முடிவு குறித்து மருது அழகுராஜ் சொல்லும்போது, "மக்கள் மன்றத்தை நாட போகிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவில் வழக்கு ஏதாவது மாற்றங்கள் நடந்து, அதில் ஏதாவது வாய்ப்புகள் வந்தால்தான், இது சம்பந்தமான திருத்தங்கள் ஏற்படும் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!

இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்தியத் தேர்தல் ஆணையம் கர்நாடகா மாநில தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஏற்கப்பட்டது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதிமுக விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து பிறப்பித்த உத்தரவில், இப்போது எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை என்று சொல்லியிருப்பதால், ஓபிஎஸ்ஸுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.. தற்சமயம், அடுத்தடுத்த வெற்றிகள் எடப்பாடிக்கு சாதகமாக வந்தாலும்கூட, சட்டரீதியாக எதிர்கொள்ள ஓபிஎஸ் தயாராகவே இருப்பதாக தெரிகிறது.. எனவே, வழக்கம்போல், எடப்பாடியின் ஆதரவாளர்கள் மட்டுமே இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
அந்தவகையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பானது, எடப்பாடி பழனிசாமி தரப்பினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனையடுத்து, அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகம் முன்பும் பட்டாசுகளை வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications