Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் அடி.. அசையுது "மணல் கோட்டை".. எடப்பாடி "ராஜதந்திரம்".. ஆஹா.. இதை எப்படி மறந்தாரு பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் மாநாடு வெற்றியா? தோல்வியா? என்ற விவாதம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.. அதேசமயம், இந்த மாநாடு சொல்லும் பாடம் என்ன? எதைநோக்கி ஓபிஎஸ் அரசியல் இனி பயணிக்க போகிறது? என்கின்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்து இத்தனை காலமாகிவிட்ட நிலையில், இப்போதுதான் ஓபிஎஸ், பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தியிருக்கிறார்..

Can OPS overcome Edappadi palanisamys strength and How is Panneerselvam politics going to move forward

ஒருவேளை முன்கூட்டியே இப்படியான மாநாட்டை கூட்டியிருந்தால், ஓபிஎஸ்ஸுக்கான பலம் மேலும் அதிகரித்திருக்கும்.. நிர்வாகிகள், எம்எல்ஏக்களிடமும் நம்பகத்தன்மையும் அதிகரித்திருக்கும்..
அடித்தளமிட்ட மாநாடு: போதுமான அளவுக்கு கீழ்மட்டத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இப்படியான மாநாட்டை கூட்ட முடியும்.. அதுவும் குறுகிய காலகட்டத்தில், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தி காட்டியுள்ளார் ஓபிஎஸ்.. இனி அடுத்தடுத்த மாநாடுகளை, பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு அடித்தளமிட்டிருக்கிறது இந்த மாநாடு.

நீதிமன்ற உத்தரவுகள் எப்படி இருந்தாலும், பண்ருட்டியார் தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பதை போல, மக்கள் மன்றமும், தொண்டர்கள் பலமும் எங்களுக்கு இருக்கிறது என்பதைதான் ஓபிஎஸ் மாநாடு நிரூபித்துள்ளது.. அந்தவகையில், மக்களை நேரடியாக வந்து சந்தித்துள்ளார்.. தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்ட தொண்டர்களை தமிழகத்தின் மத்திய பகுதியில் வரவழைத்து, தன் பலத்தையும் ஓரளவு நிரூபித்துக்காட்டி உள்ளார்.. எத்தனையோ முட்டுக்கட்டைகளை எடப்பாடி தரப்பு போட்டும்கூட, அவைகளை முறியடித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா: ஒரு மாநாட்டின் வலிமையை, அந்த மாநாட்டில் இயற்றப்படும் தீர்மானங்கள்தான் தீர்மானிக்கின்றன.. அந்தவகையில், ஓபிஎஸ் தரப்பில் நிறைய தீர்மானங்கள் நேற்றைய தினம் இயற்றப்பட்டுள்ளது.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு கலைக்கப்பட்டு, அடிப்படை தொண்டர்களால் புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும், போலி பொதுக்குழு மூலம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லாது, எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக ஜாதி, மதம், கடந்து அனைத்து மக்களுக்குமான இயக்கமாக இருக்க வேண்டும், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான், புதிய பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் ஓபிஎஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், இந்த தீர்மானங்கள் எந்த அளவுக்கு செயல்வடிவம் பெறப்போகின்றன? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. ஆனால், தீர்மானங்கள் எதுவும் ஆச்சரியத்தை தரவில்லை என்றும், எடப்பாடியை ஓபிஎஸ் தரப்பில் நிராகரித்து என்ன பலன்? இதற்கு நீதிமன்றம்தானே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்? எடப்பாடிக்கு எதிராக ஒரு மாநாட்டை கூட்டும்போது, அதில், எடப்பாடிக்கு செக் வைக்கும் வகையில் தீர்மானங்கள் வலுவாக இல்லையே? என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

எடப்பாடி பழனிசாமி வாபஸ்: இதனிடையே, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், ஒரு டிவி சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், கர்நாடக தேர்தலை சுட்டிக்காட்டி, முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார்.. ஷ்யாம் அப்போது பேசும்போது, "எங்கள் இருப்பை காட்டிக் கொள்ளவே, கர்நாடக தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம் என்று எடப்பாடி பழனிசாமி காரணம் கூறினார்.. பிறகு மேலிடம் கேட்டுக்கொண்டதால் வாபஸ் பெற்றோம் என்று விளக்கம் தந்தார்.

ஆனால், கர்நாடக தேர்தலை காரணம் காட்டிதான், டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கவும் கோரினார்.. இதை காரணம் காட்டிதான் தேர்தல் ஆணையமும் பச்சைக்கொடி காட்டியது.. கடைசியில், கட்சியில் தன்னுடைய பதவியை ஸ்திரப்படுத்திவிட்டு, அதன்பிறகு, தன்னுடைய வேட்பாளரை வாபஸ் கொண்டார். இத்தனைக்கும் அதிமுக வெற்றி பெறக்கூடிய தொகுதியும் அது கிடையாது..

எடப்பாடியின் இந்த செயலை, யார் கேள்வி கேட்பது? ஓபிஎஸ்தான் இதை கேள்வி கேட்க வேண்டும்.. நேற்று மாநாட்டில் கேள்வி கேட்டாரா? கேட்கவில்லையே? "நயவஞ்சகர்" என்று எடப்பாடியை சொல்கிறாரே தவிர, எந்த வகையில் என்று ஓபிஎஸ் சொல்லவில்லை.. ஆக, ஓபிஎஸ் மாநாடு பறைசாற்றுவது எதை? என்பதுதான் கேள்வியாக உள்ளது..

Can OPS overcome Edappadi palanisamys strength and How is Panneerselvam politics going to move forward

நயவஞ்சகர்: ஒரு மாநாடு என்றால், அதன் பிரகடனம் ரொம்ப முக்கியம்.. அப்படியானால் இந்த திருச்சி மாநாடு எதை நோக்கி செல்கிறது? எதை நோக்கி செலுத்தப்போகிறது? அப்படி இல்லாத மாநாடு வெறும் கூட்டமாகத்தான் இருக்க முடியும்.. ஓபிஎஸ் இனி, என்ன செய்ய போகிறார்? அவரை நம்பியிருப்பவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பிவிடுவார்களா? என்பல கேள்விகளும் எழுந்துள்ளன" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்...!!

இதனிடையே, நேற்று நடந்த திருச்சி மாநாட்டில், ஓபிஎஸ் மகன்களின் பங்களிப்பும் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.. அதிமுக தலைமை அலுவலக முகப்பு வடிவில் மேடை, மாநாட்டில் தொண்டர்கள் உட்காரும் 2 பகுதிகளுக்கு நடுவில் நடந்து வர நீண்ட மேடை + இரட்டை இலை சின்னத்துடன் கொடி + தொண்டர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், + உணவு என பல்வேறு விஷயங்களை ரவீந்திரநாத்துடன் சேர்ந்து ஜெயபிரதீப்பும் கவனித்து கொண்டாராம்.. இந்த மாநாட்டின் வெற்றியையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் முயற்சியை முறியடிக்க, தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட அதிரடியிலும் இறங்கியிருக்கிறார்களாம் ஓபிஎஸ்ஸின் மகன்கள் ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+