Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நாராயணா".. அய்யோ குய்யோ.. "பொருளாதார புலி" ப. சிதம்பரம் இதுக்கு மட்டும் வாயே திறக்கலயே.. பாஜக சுளீர்

பொருளாதார புலி ப சிதம்பரம் வாய் திறக்காமல் உள்ளது ஏன் என்று பாஜக நாராயணன் திருப்பதி கேட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பொதுத் துறை நிறுவனங்களின் செல்வத்தை, மக்கள் பணத்தை இழக்க செய்ததற்கு மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். பொருளாதார புலி என்று மார்தட்டி கொள்ளும் சிதம்பரம் வாய் திறப்பாரா?" என்று பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றிய மோசடிகளை வெளியிட்டதில் இருந்தே, தேசிய அரசியல் தகிக்க தொடங்கி உள்ளது.. எதிர்க்கட்சிகள் விடாமல் கேள்விகளை எழுப்ப, பாஜகவோ பதிலளிக்க முடியாமல் திணறி வருவதாக தெரிகிறது..

இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன..

அதானி மேட்டர்

அதானி மேட்டர்

இது தொடர்பான அமளி காரணமாக நடப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.. அந்தவகையில், நாடாளுமன்ற பட்ஜெட் முதல்கட்ட கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.. நிறைவு நாளில் அதானி குழும மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டதால் மாநிலங்களவை முடங்கியது. அதனால், அவையை மார்ச் 13ம் தேதி வரைக்கும் அவைத்தலைவர் ஒத்திவைத்தார். இதேபோல, மக்களவையும் மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது...

காங்கிரஸ் ஆவேசம்

காங்கிரஸ் ஆவேசம்

எனினும், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை லேசில் விடுவதாக இல்லை.. "அதானி குழுமத்தின் பொருளாதார ஊழல்களுக்கு பிரதமர் மோடி உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மோடி மவுனம் காப்பது ஏன்? இதை விசாரிக்க மத்திய அரசு நிறுவனங்களும் தயாராக இல்லை, மோடியும் தயாராக இல்லை. வருமான வரித்துறையும் விசாரிக்க மறுத்துள்ளது. பிரதமருக்கும், அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதும், பங்கு இருப்பதும் உறுதியாகியுள்ளது. இதை நீதிமன்றம் விசாரித்து தான் உரிய நீதியை தர வேண்டும்" என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

அதானி சிக்கல்

அதானி சிக்கல்

இந்நிலையில், தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவருமான நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், எல்ஐசி அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக எவ்வளவு முதலீடு செய்தோம் என்பதையும் எந்த வித இழப்பும் ஏற்படவில்லை என்பதை முறையே தெளிவுபடுத்தியும் பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்க மறுத்து ஜனநாயக படுகொலையை செய்து கொண்டிருக்கின்றன என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.. மேலும் அந்த பதில் உள்ளதாவது:

நாராயணா

நாராயணா

"ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதானி நிறுவனத்திற்கு கடன் வழங்கியதையும், எல்ஐசி அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதையும் குறிப்பிட்டு, ஐயோ, பொது துறை நிறுவனத்தின் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, அந்த நிறுவனங்கள் மிக தெளிவாக தாங்கள் எவ்வளவு கடன் கொடுத்தோம், எவ்வளவு முதலீடு செய்தோம் என்பதையும் எந்த வித இழப்பும் ஏற்படவில்லை என்பதை முறையே தெளிவுபடுத்தியும் 'குய்யோ, முறையோ' என கூச்சலிட்டு பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்க மறுத்து ஜனநாயக படுகொலையை செய்து கொண்டிருக்கின்றன.

வாய் திறக்கலயே

வாய் திறக்கலயே

ஆனால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், கிங் ஃபிஷர், லேன்க்கோ இன்ஃப்ரா, பூஷன் ஸ்டீல், ஜேபி அஸோஸியேட்ஸ், யூனிடெக், மோனெட் இஸ்பாட் மற்றும் ஐவிஆர்சிஎல் போன்ற நிறுவனங்களில் இதே எல்ஐசி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததோடு பல நூறு கோடிகளை இழக்க செய்ததா இல்லையா என்பதை தெளிவு படுத்த வேண்டும். இந்த நிறுவனங்கள் அனைத்துமே மிக பெரிய இழப்பை பொது துறை நிறுவனங்களுக்கு உண்டாக்கியதற்கு காரணம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தான் என்று ஏற்றுக்கொள்வார்களா?

பொருளாதார புலி

பொருளாதார புலி

ஏதோ, பொது துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற நாடகத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிறுத்தி கொள்வதோடு, பொது துறை நிறுவனங்களின் செல்வத்தை, மக்கள் பணத்தை இழக்க செய்ததற்கு மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். பொருளாதார புலி என்று மார்தட்டி கொள்ளும் சிதம்பரம் வாய் திறப்பாரா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்... நாராயணன் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்தான் காங்கிரஸ் தரப்பை எரிச்சலூட்டி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் தரப்பு என்ன பதிலடி தர போகிறது என தெரியவில்லை.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+