"சசிகலா புஷ்பா" பாஜக தலையில்? வந்துச்சே ஆத்திரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு.. அப்ப நாடார் ஓட்டுகள்?
சென்னை: தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் யார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.. அந்தவகையில், லோக்கல் பாலிட்டிக்ஸ் தூத்துக்குடியில் வெடிக்க துவங்கி உள்ளதாம். என்ன காரணம்?
விடாமல் பல்வேறு நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் தன்னுடைய தூத்துக்குடி தொகுதி மக்களுக்காக செய்து வருபவர் திமுக எம்பி கனிமொழி.

கனிமொழி: சமீபத்தில் வெள்ளம் மழை பாதிக்கப்பட்டபோதுகூட, தொகுதியிலேயே தங்கியிருந்து, மக்களுடன் மக்களாக நின்று, மீட்பு பணிகளை முன்னெடுத்தவர். எனவே, கனிமொழியை பொறுத்தவரை எப்போதுமே தொகுதி மக்களிடம் நன்மதிப்பையும், நற்பெயரையும் பெற்று வருகிறார்.
இந்த முறை மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கேட்டு கனிமொழி எம்.பி. விருப்பமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே கனிமொழி பெயரில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அவரது ஆதரவாளர்கள் அளித்திருந்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரும் கனிமொழி பெயரில் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் ஏற்கனவே விருப்ப மனு கொடுத்திருந்தனர்.
தமிழிசை சவுந்தராஜன்: ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக உள்ள தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட போவது யார் என்று தெரியவில்லை. கடந்த முறை, தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்று போனார்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை தேர்தலில் ஜாதி முக்கிய பங்காற்றும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள நாடார் வாக்குகளை கவர தற்போது சரத்குமாரை தங்கள் கட்சிக்கு பாஜக கொண்டு வந்துள்ளது.
சமுதாய வாக்குகள்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி. விருதுநகர் மக்களவை தொகுதிகளில் நாடார் சமுதாய வாக்குகளே அதிகம்... அதுபோல தனித் தொகுதியான தென்காசியிலும் நாடார் வாக்குகள் கனிசமாக உள்ளது.
தென் மாவட்டங்களில் நாடார் சமுதாய வாக்குகளை கவருவதற்கு சரத்குமாரின் வருகை நிச்சயம் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று பாஜக நம்புகிறது. ஆனால், தனக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று சரத்குமார் கேட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு பாஜக இன்னும் எந்த பதிலையும் சொல்லவில்லையாம்.
ஒருவேளை, தூத்துக்குடியில் போட்டியிட சரத்குமார் விரும்பவில்லையானால், பாஜகவின் சசிகலா புஷ்பா போட்டியிடுவார் என்று பாஜக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளதாம். சசிகலா புஷ்பா என்றதுமே, திமுகவைவிட கடுமையாக கொந்தளித்தது தூத்துக்குடி மாவட்ட பாஜகவினர்தானாம்.. சசிகலா புஷ்பாவுக்கு சீட் தரக்கூடாது என்று இப்போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சசிகலா புஷ்பா: சசிகலா புஷ்பா போன்றவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால்தான் பாஜகவை மக்கள் மதிப்பதே கிடையாது.. தூத்துக்குடி தொகுதிக்கு, நேர்மையான, தகுதியான வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்து அறிவிக்க வேண்டும், சசிகலா புஷ்பா போன்றவர்களை வேட்பாளராக அறிவிக்கக்கூடாது என்று மாநில தலைவர் அண்ணாமலைக்கே கடிதம் எழுதிவிட்டார்களாம்.
சசிகலா மீது, சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவிக்க காரணம் என்ன வென்று தெரியவில்லை.. சசிகலா புஷ்பாவும் வேட்பாளராக அறிவிக்காவிட்டால், ராதிகா சரத்குமாரை களமிறக்க போகிறார்களா? என்றும் தெரியவில்லை. எப்படி பார்த்தாலும், கனிமொழியின் வெற்றியை திமுக உறுதியாக நம்பியிருக்கும் நிலையில், அவரை எதிர்க்கும் வேட்பாளர் யார் என்பதில் மிகப்பெரிய ஆர்வம் தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications