தெரு நாய் பிரியர்களே.. தயவு செய்து பாருங்க.. இந்த சூழலில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? வீடியோ
சென்னை: தெரு நாய் பிரியர்கள் தயவு செய்து இது போன்ற மோசமான சூழ்நிலைகளில் பெற்றோர் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள முடியுமா? என்று பிரபல பத்திரிக்கையாளர் தீபிகா நாராணயன் பரத்வாஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.
நாய்கள் நன்றியுள்ள பிராணியாகவும் காவலாளியாகவும் இருக்கும் அதேநேரம் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் உண்மையில் கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பிரச்சனையாகும். சென்னை போன்ற பெருநகரங்களில் தெருநாய்கள் தொல்லை மிக அதிகம். நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் போகவே முடியாது. அந்த அளவிற்கு அவற்றின் அட்டூழியம் அதிகமாக உள்ளது.

நள்ளிரவில் மட்டுமல்ல, பகலில் கூட சில பகுதிகளுக்குள் போகவே முடியாது. சர்வ சாதாரணமகா ஒன்று சேர்ந்து குழந்தைகளை தாக்கி வருகின்றன. கடந்தசில மாதங்களுக்கு முன்பு நாய் கடித்துக் குதறியதில் கேரளாவில் பச்சிளங் குழந்தை உயிரிழந்தது. நாய்க்கடியால் ரேபிஸ் நோய் தாக்கி மாணவி உயிரிழந்தார். நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். நாய் குறுக்கே வந்ததால் இறந்தவர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் மிக அதிகம். டி தெரு நாய்களால் அவ்வப்போது மரணங்களும், உடற் காயங்களும் அடிக்கடி ஏற்படுகிறது.
அதேநேரம் சிறுவர்களை தெருநாய்கள் கூட்டாகவோ தனியாக துரத்தித் துரத்திக் கடித்து குதறும் காட்சிகளும், நடந்து செல்பவர்களை கூட்டம் கூட்டமாகத் தெரு நாய்கள் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன . காலையில் வாக்கிங் செல்பவர்கள, இரவு தாமதமாக வீட்டிற்கு வருபவர்கள், குழந்தைகளுடன் சாலையில் செல்வோர் தெருநாய் தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளான தெருநாய்கள் பல உள்ளன. சர்வ சாதாரணமாக நாய்கள் பலரை கடித்து வைக்கின்றன.
தெருநாய் கடித்து ஒரே நாளில் 20 பேர், 30 பேர் காயம் அடைந்த பிறகே அந்த நாய் அங்கிருந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை கொல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு அச்சுறுத்தலான தெருநாய்களை கொல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன.
Can street dog lovers please share how can human beings protects themselves and their kids in such situations since you say it is only human beings always at mistake ? pic.twitter.com/yoTJteuLJc
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) January 3, 2024
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்கள் வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் இறப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ரேபிஸ் 100% மரணம் தரும் நோய் ஆகும். இப்படியான சூழலில் ரேபிஸ் தாக்கிய நாய்களை உடனடியாக கொல்வதில் சட்ட சிக்கல் இருக்கிறது. மேலும் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது நகராட்சி, மாநகராட்சிகளுக்கு சவாலாக உள்ளது. 2001ஆம் ஆண்டுக்கு முன்பாக பிடிக்கப்படும் தெரு நாய்களை கொல்வதற்கு சட்டத்தில் இடம் இருந்தது.
ஆனால் 1960ல் உருவாக்கப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட்டு, 2001ல் முற்றிலும் நாய்களுக்கு பாதுகாப்பாக அந்த சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த சட்டம் காரணமாக தெரு நாய்களை கொல்ல முடியாது. பாதிப்பை ஏற்படுத்தும் நாய்களை கருத்தடை செய்து மீண்டும் அந்த தெரு நாய்ளை எந்த இடத்தில் வாழ்ந்தனவோ அதே இடத்தில் மீண்டும் கொண்டுபோய் விட வேண்டும். இது 2001ம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் ஆகும். இந்த சட்டத்தை மாற்றினால் மட்டுமே தெரு நாய் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். சென்னையில் லட்சக்கணக்கான தெருநாய்கள் உள்ள நிலையில் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு கருத்தடை தீர்வாகாது என்பதே பொதுமக்களின் வாதம் ஆகும்.
இந்த சூழலில் தெரு நாய் பிரியர்கள் தயவு செய்து இது போன்ற மோசமான சூழ்நிலைகளில் பெற்றோர் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள முடியுமா? என்று பிரபல பத்திரிக்கையாளர் தீபிகா நாராணயன் பரத்வாஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார். அந்த வீடியோ பார்ப்பதற்கே பயமாக உள்ளது. அதில் குழந்தையுடன் வந்த தாயிடம், நாய் தாவி தாவி குதித்து குழந்தையை கடிக்க முயல்கிறது.
அந்த தாய் கதறி அழுதபடி, குழந்தையை நாயிடம் இருந்து பாதுகாக்க போராடுகிறார். நாய் விடாமல் அவரை கடித்தபடி குழந்தையை எப்படியாவது கடித்து குதற தாவி குதிக்கிறது. இப்படியாக அந்த வீடியோ ஓடும் நிலையில், இறுதியாக ஒருவர் வந்த நாயை போராடி விரட்டி விடுகிறார். கண்போரை கலங்க வைத்த வீடியோ விலங்கின ஆர்வலர்களுக்கு கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.. இதுபோன்ற ஆபத்தான நாய்களை என்ன செய்வது என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications