'இதெல்லாம் ரொம்ப தப்பு..' அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை ஏற்க முடியாது.. ஜெயக்குமார் தாக்கு
சென்னை: சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது என்று விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்றும் கட்சி நலனுக்காக சசிகலா பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டுமே தவிரத் தடையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மதுசூதனனை நலம் விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

மதுசூதனன் உடல்நிலை
சரியாக அதேநேரத்தில் சசிகலாவும் மதுசூதனனிடம் நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் இருவரும் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக மதுசூதனனிடம் நலம் விசாரித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வெளியே காரில் சசிகலா இருந்தார். இருப்பினும், அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரே, சசிகலா உள்ளே சென்று நலம் விசாரித்தார்.

ஏற்க முடியாது
அதிலும் குறிப்பாக சசிகலா மருத்துவமனைக்கு வந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் செல்வதை ஏற்க முடியாது. அதிமுகவோடு எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை. சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைச் சந்திக்கச் சென்றதை அதிமுக விமர்சிக்க விரும்பவில்லை..

வி.என் ஜானகி
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ, அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும் மாறாகத் தடையாக இருக்கக் கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.

உதயநிதி படம்
தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் படத்தைச் சட்டசபையில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும். சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை வைத்து பூஜை செய்யட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை.
Recommended Video

நீட் தேர்வு
நீட் தேர்வு குறித்த திமுக அரசு முன்னுக்குப் பின் முரணாக மக்களையும் மாணவர்களையும் திசை திருப்பும் வகையிலும் ஏமாற்றும் விதமாகப் பேசி வருகிறது. தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்று பேச்சை மாற்றிப் பேசுகிறார்கள். 2010ம் ஆண்டு திமுக அரசு மத்திய அரசாக இருந்த காங்கிரசின் முழு ஆதரவோடு நீட் தேர்வைக் கொண்டு வரக் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மாற்றுப்பட்ட கருத்தைப் பேசி வருகிறார்கள்..

7.5% இட ஒதுக்கீடு
நீட் தேர்வு உண்டா இல்லையா என்பதை திமுக தெரிவிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது உண்மைக்கு மாறான ஒன்று. கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசு" என்று அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications