அமித்ஷாவை "நெருங்கும்" எடப்பாடி பழனிசாமி?.. சைஸாக என்ட்ரி தருகிறதா பாஜக.. அனலடிக்கும் அதிமுக மேட்டர்
அதிமுக உள்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிட முடியாது என்கிறார்கள்
சென்னை: அதிமுக ஒரு சுயம்பு.. வேறு கட்சிகள் இந்த கட்சியின் அதிகாரத்தில் தலையிட முடியாது.. அப்படி தலையிடுவதை நாங்களும் விரும்பவில்லை.. மற்ற கட்சிகளும் தலையிடாது, குறிப்பாக பாஜக' என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் வைகை செல்வன் நமக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதிமுக விவகார உச்சக்கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.. ஆனால், பாஜக இதுவரை இவர்கள் விவகாரத்தில் தலையிடவில்லை. 2 பேரையும் அழைத்து பேசவில்லை.. விசாரிக்கவில்லை.. சந்திக்க வேண்டும் என்ற டைம் கேட்டாலும், அப்பாயிண்ட்மென்ட் தரவில்லை.
ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமான பாஜக ஆதரவு நிச்சயம் தரும் என்ற செய்திகள் கசிந்து வந்தாலும், எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையும், மெஜாரிட்டி ஆதரவும் பிடிக்காமல், பாஜக மேலிடம் கண்டும் காணாமல் ஒதுங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது..

அமித்ஷா
அதுமட்டுமல்ல, எடப்பாடி டீமை கழட்டிவிட்டு பாஜக புது கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்றும், அதேபோல, பாஜக இல்லாமலேயே எடப்பாடியும் எம்பி தேர்தலுக்கு ரெடியாகலாம் என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் சில தினங்களுக்கு முன்பு பாஜக குறித்து பேசினார். அதிமுக விவகாரத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் தீர்க்க முடியாது என்று கருத்து கூறியிருந்தார்.

வைகைச்செல்வன்
இதுகுறித்து எடப்பாடி டீமில் உள்ள மூத்த தலைவர் வைகைச்செல்வனிடம் "ஒன் இந்தியா" சார்பில் கருத்து கேட்கப்பட்டது.. வைகைச்செல்வன் நமக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் சொன்னதாவது: சென்னை உயர்நீதிமன்றம் கடைசியாக தந்த தீர்ப்பு மாற வாய்ப்பில்லை.. ஏற்கனவே உயர்நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கி உள்ளது.. 2 நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.. பெஞ்சின் தீர்ப்பு இறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.. அப்படித்தான் சட்டவல்லுநர்களும் சொல்கிறார்கள்.. உச்சநீதிமன்றத்தில் எங்கள் பக்க நியாயத்தை எடுத்து வைப்போம்.. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது..

சுயம்பு
அதிமுக ஒரு சுயம்பு.. வேற கட்சிகள் இந்த கட்சியின் அதிகாரத்தில் தலையிட முடியாது, அப்படி தலையிடுவதை நாங்களும் விரும்பவில்லை.. மற்ற கட்சிகளும் தலையிடாது, குறிப்பாக பாஜக." என்று தெளிவுபடுத்தி உள்ளார். பாஜகவுடன் தாமரை இலை நீர்போல எடப்பாடி தரப்பின் உறவு தென்பட்டாலும், இதே நிலை எம்பி தேர்தல் வரை நீடிக்குமா? பாஜக தயவு இல்லாமல் அரசியல் செய்ய முடியுமா? தேர்தலை சந்திக்க முடியுமா? என்பது தெரியவில்லை.. தலைவர்களை சந்தித்து, முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பேசியதாகவும், எடப்பாடி மீதான நல்லெண்ணத்தை விதைக்கவும் இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும் செய்திகள் கசிந்து வரும்நிலையில், வைகைச்செல்வனின் இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது..

2 தலைகள்
அதேசமயம், எடப்பாடி தரப்பில் இருந்து, கொங்குவில் இருந்து 2 தலைகள், டெல்லி வரை சென்று, பாஜக சீனியர் அதுமட்டுமல்ல, அதிமுகவில் தற்போது நடக்கும் பிரச்னையால், தமிழ்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லை என்ற நிலை ஏற்படுவது, பாஜகவுக்கும் சௌகரியமாக இருக்கிறது... ஒருவேளை அதிமுகவிட்ட தவறவிடும் இடத்தை பாஜக பிடிக்க முயலும்.. அதேசமயம், வாக்குவங்கியை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ், எடப்பாடி இருவரையும் இணைத்து வைக்கவும் முயற்சி செய்யலாம்.. எனினும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதுதான் அதிமுகவின் எதிர்கால அரசியலாக இருக்க போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications