பிளானே இதுதான்.. பிரதமரை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் ஏர்போர்ட் போகலையாமே.. காரணம் என்ன தெரியுமா?
பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் ஏர்போர்ட் செல்லவில்லையாம்
சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், முக்கிய சம்பவம் ஒன்று திமுக தரப்பில் நடந்துள்ளது.. அதுதான் அரசியல் களத்தில் வட்டமடித்தும் வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. தமிழகத்துக்கும், நம் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைய போகும் நிகழ்வு இதுவாகும்...
முழுக்க முழுக்க விளையாட்டு போட்டிகளை துவக்கி வைப்பதற்காகவே பிரதமர் மோடி வருகிறார் என்றாலும், இதற்குள் சில மறைமுக அரசியல் செய்திகளும் பரபரத்து கொண்டுதான் இருக்கின்றன..

2 தலைவர்கள்
குறிப்பாக, அதிமுகவின் 2 தலைவர்களையும் மோடி சமாதானப்படுத்துவாரா? அவர்களை ஒன்றாக கூப்பிட்டு பேசுவாரா? தனித்தனியாக பேசுவாரா? இந்த தலைவர்கள் எப்போது பிரதமர் மோடியை சந்தித்து பேச போகிறார்கள்? என்ன பேச போகிறார்கள்? அப்படியே பிரதமர் அழைத்து பேசினாலும், அவர் சொல்வதை எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா? இப்படி எத்தனையோவிதமான யூகங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

ரகசியம்
மற்றொரு புறம், பிரதமர் வருகை, வரவேற்பு குறித்து சில தகவல்கள் திமுகவிலும் கசிந்து வருகிறது.. இன்று சென்னை ஏர்போர்ட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் வரவேற்கவில்லையாம்.. இப்படித்தான், கடந்த முறை மோடி சென்னை வந்தபோது, ஏர்போர்ட்டுக்கு செல்லவில்லை.. அடையாறு ஐஎன்எஸ் விமானத்தளத்தில்தான் மோடியை வரவேற்றார் ஸ்டாலின்.. ஆனால், ஏர்போர்ட்டுக்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை? மோடியை ஏர்போர்ட்டில் வரவேற்பதை திட்டமிட்டு தவிர்த்தாரா? என்றெல்லாம் பாஜகவும் கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தது.

உளவுத்துறை
ஆனால், உண்மை என்னவென்றால், மோடியின் ஹெலிகாப்டரில் செல்வதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பில்லை என்பதால் ஏர்போர்ட்டுக்கு ஸ்டாலின் செல்லவில்லை' என்று உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் காரணம் கூறப்பட்டது.. அதாவது, மோடியை வரவேற்க ஏர்போர்ட்டிற்கு ஸ்டாலின் சென்றால், மோடியின் ஹெலிகாப்டரில்தான் ஐஎன்எஸ் தளத்துக்கு செல்ல வேண்டும்... ஆனால், அதற்கு முன்னதாக, மோடியுடன் ஸ்டாலின் செல்வதை பிரதமர் அலுவலகம் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும், அதேபோல மோடியுடன் செல்ல, ஸ்டாலினையும் அழைக்க வேண்டும்.
Recommended Video

ஏர்போர்ட்
ஆனால், ஸ்டாலினுக்கு அழைப்பில்லை.. மோடியின் ஹெலிகாப்டரில் செல்ல ஸ்டாலினுக்கு அழைப்பில்லை என்பதால் ஏர்போர்ட்டுக்கு ஸ்டாலின் செல்லவில்லை'' என்று உளவுத்துறை அதிகாரிகள் சார்பில் காரணம் கூறப்பட்டது.. இன்றைய தினம் பிரதமர் சென்னை வரும்நிலையில், இன்றும் ஏர்போர்ட்டுக்கும் ஸ்டாலின் செல்லவில்லை.. ஐஎன்எஸ் தளத்துக்கும் செல்லவில்லை.. இரண்டு இடத்துக்கும் செல்லாமல், நேரு விளையாட்டு அரங்கத்தில்தான் மோடியை சந்திக்கிறாராம் ஸ்டாலின்...

இதுதான் காரணம்
இதற்கான காரணமும் என்ன என்பது வெளியாகி உள்ளது.. செஸ் விளையாட்டு போட்டிகளை மாலை 6 மணிக்கு துவக்கி வைக்கிறார் மோடி. அதன் பிறகு 1 மணி நேரம் மட்டுமே அங்கிருக்கிறார். இந்த துவக்கவிழாவுக்காக நிறைய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கலை நிகழ்ச்சிகள், விழா தொடங்குவதற்கு முன்பே நடந்து கொண்டிருக்கும். அதை துவக்கி வைத்து ரசிப்பதற்காக 5 மணிக்கெல்லாம் நேரு அரங்கத்துக்கு சென்று விடுவார் ஸ்டாலின். அதனால், அரங்கத்துக்கு வரும்போது மோடியை வரவேற்றுக்கொள்ளலாம் என்பதால் மோடியை வரவேற்க மற்ற 2 இடங்களுக்கும் ஸ்டாலின் செல்லவில்லை" என்று சுட்டிக்காட்டுகிறார்களாம்..












Click it and Unblock the Notifications