1 வெட்டு 3 துண்டு.. "கமலாலயம்" கிளப்பிய கிலி.. புறப்பட்ட பூதங்களும், 4 சீரிஸ்களும்.. ரெடியாகும் திமுக
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த திமுக மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் களத்தில் வெடித்து கிளம்பி கொண்டிருக்கிறது.. அது சில தாக்கங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..!!
வாட்ச் குறித்து அண்ணாமலை நிறைய விவகாரங்களை வெளியிட்டிருந்தார்.. குறிப்பாக அவர் பேசும்போது, "இந்த வாட்ச் ரபேல் நிறுவனத்துடையது. பிரான்ஸ் நிறுவனம். உலகத்தில் மொத்தம் இருப்பதே 50 வாட்ச் தான்.

இந்த வாட்ச் 147வது வாட்ச். ரபேல் விமானம் எப்படியிருக்குமோ அப்படி இந்த வாட்ச் இருக்கும். இந்தியாவில் 2 வாட்ச் உள்ளது. சாதாரணமாக கட்ட முடியாது. காரணம் வெயிட் அதிகமாக இருக்கும். இந்தியாவில் 2 வாட்ச் தான் விற்பனையாகியது. மும்பையில் ஒரு எம்என்சி நிறுவனத்தில் உள்ளவர் கட்டியிருக்கிறார்.
வாட்ச் விவகாரம்: கோவையில் உள்ள நிறுவனத்திடம் விற்கப்பட்டது. மே மாதம் 27ம் தேதி வாட்ச் வாங்கினேன். இந்த வாட்சை நாளைக்கு போய் வாங்க வேண்டுமென்றால் வாங்க முடியாது. மார்க்கெட்டில் இல்லை. இந்த வாட்ச் 2021 மார்ச் மாதத்தில், சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கினார். மே மாதத்தில் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, வாட்சை கொடுப்பதற்கு ஒப்பு கொண்டார். லஞ்சமாக வாங்கினார் என்று சொல்வது ஏற்புடையது. அல்ல. அவரை 2 வருடமாக தெரியும். 27.5.21ல் இருந்து இருக்கும் ஒரே வாட்ச் இது தான். 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை சொன்ன இந்த வாட்ச் விவகாரம் தற்போது புகைச்சலை தர ஆரம்பித்துள்ளதாம். அண்ணாமலை இப்போது சென்னையை அடுத்த பனையூரில் பிரமாண்ட வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டிற்கான ஒரு மாத வாடகை மூன்றே முக்கால் லட்சம் ரூபாய்... அவரது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க செலவு, அவரது செலவு, 3 பிஏக்கள் செலவு, டிரைவர் சம்பளம் என்று பல்வேறு செலவுகளுக்கு மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் ஆகும்.
அப்படி பல லட்சம் ரூபாய் செலவை நண்பர்கள் மாதம் மாதம் செய்கிறார்கள் என்று அண்ணாமலை சொல்கிறார்... அப்படியான நண்பர்கள் இருப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று... அப்படி நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர்...
சிக்கல்கள் : ஒன்று, அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது இவர்களால் அவர்கள் பயனடைந்திருக்க வேண்டும் அல்லது அண்ணாமலையால் அவர்கள் காரியம் சாதித்து இருக்க வேண்டும் என்ற கேள்வியை ஆர்வலர்கள் எழுப்ப தொடங்கியுள்ளனர். சும்மாவே ஓசிக்கு எந்த நண்பர் இப்படி செலவை ஏற்பார்கள்? கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது.
அதுமட்டுமல்ல, 4 மாதங்களுக்கு முன்பு, இதே ரபேல் விவகாரம் வெடித்தபோது, மொத்தம் 500 வாட்ச்கள்தான் உள்ளன.. இது 149வது என்று கூறியிருந்தார் அண்ணாமலை.. இன்றைய தினம் 147வது வாட்ச் என்கிறார்.. அப்படியானால், அண்ணாமலையிடம் மொத்தம் 2வாட்ச்கள் இருக்கிறதா? தான் ஒரு தேசியவாதி என்கிறாரே, அப்படியானால் 2 கைகளிலும் 2 வாட்ச்களை கட்டிக்கொள்வாரா? என்றெல்லாம் இணையத்தில் சந்தேகங்கள் உலா வர துவங்கி உள்ளன.. "முன்பு - பின்பு" என்று குறிப்பிட்டு, லிஸ்ட் வெளியிட்டதை அண்ணாமலை தவிர்த்திருக்கலாமே? என்றும் கருத்துக்கள் எழுகின்றன.

4 சீரிஸ்கள் : அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி பதிலடி தந்துள்ளார்.. அந்தவகையில், திமுக தரப்புக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அண்ணாமலை ஆளாகி உள்ளதாக தெரிகிறது.. மற்றொருபுறம் அண்ணாமலை மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என திமுக முக்கிய புள்ளிகள் தீவிர ஆலோசனையில் இப்போது இறங்கியிருக்கிறார்களாம்.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்தடுத்து 4 சீரிஸ்களை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருப்பதால், அதனை தடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.
காரணம், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றபோதே, திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியில் தமிழக பாஜக இறங்கிவிட்டது.. ஆனால், அதை திமுக மேலிடம் பெரிதுபடுத்தாமல், கண்டுகொள்ளாமல் விலகியிருந்தது.. அண்ணாமலை சொல்லும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்காமலும் இருந்தன.. அவதூறுகளுக்கெல்லாம் பதிலளித்து, தேவையில்லாமல், பாஜகவுக்கான முக்கியத்துவத்தை தந்துவிடக்கூடாது என்பதில் திமுக கவனமாகவே செயல்பட்டு வந்தது... இதற்கு பிறகுதான் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிகழ்ச்சில் ஒன்றில் பேசும்போது, திமுகவுக்கு ஆலோசனை ஒன்றை தந்திருந்தார்.
3 முடிச்சுகள்: "பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லுகிற புகார்கள் குறித்து, திராவிட முன்னேற்றக்கழக தம்பிகள் கவனமாக இருக்க வேண்டும்.. நம்மை ஊழல் என்று சொல்லிவிட்டு, அந்த ஊழல் என்ற பிரச்சாரத்திலே பின்பக்கமாக கதவை திறந்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்.. அண்ணாமலை என்ன சொல்கிறார்? ஊழல் என்று ஒரு விஷயத்தை சொல்லி, அதை பத்திரிகைகளிலே பிரமாதமாக படமாக போட்டு காண்பித்து, இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு நஷ்டஈடு என்று சொல்லி, பேனை பெருமாளாக்குவது என்று சொல்வார்களே, அதுபோல, ஒரு பெரிய ஊழல் பூதத்தை நம்மீது திணிக்கிறார்.. எனவே அண்ணாமலையின் புகார்களில், திமுக கவனமாக இருக்க வேண்டும்" என்று எச்சரித்தார்..
இதனிடையே, அண்ணாமலை மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என திமுக முக்கிய புள்ளிகள் தீவிர ஆலோசனையில் இப்போது இறங்கியிருக்கிறார்களாம்.. ஆர்எஸ் பாரதி இதற்கு பதிலடியை தந்துவிட்டாலும்கூட, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்தடுத்து 4 சீரிஸ்களை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருப்பதால், அதனை தடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.
எம்பி தேர்தல் வரப்போகும் நேரத்தில், இதுபோன்ற அவதூறுகளை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே தற்போதைய முதல் எண்ணமாக இருக்கிறதாம்.. ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம்பொதுவாக கூறப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் திமுக முடிவெடுத்துள்ளது... அதேநேரத்தில், தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அண்ணாமலைக்கு அரசியல் "மைலேஜ்" தந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்ற முடிவிலும் இருக்கிறதாம் திமுக தரப்பு.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications