கட்டம் கட்டப்பட்ட "8 திமுக தலை".. இறங்கி அடிக்குது பாஜக.. கனிமொழி கூடவா? பின்னாலயே கண்கொத்தி பாம்பு
சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் மிகுந்த அனலை கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறது.. அதைவிட அதிகமாக, பாஜகவின் வியூகங்கள் அனலை கிளப்பிவிட்டு வருகின்றன.. இதுகுறித்து ஒரு முக்கியமான தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது.
இந்த முறை தேர்தலில், திமுகவின் வாக்கு வங்கியை உடைக்க வேண்டும், அதில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையாவது, தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது தமிழக பாஜக.

மெகா கூட்டணி: இதனால், கிட்டத்தட்ட ஒரு மெகா கூட்டணியையே அமைத்து களம் காண முற்பட்டுள்ளது.. மேலும், எங்கு பிரச்சாரம் செய்தாலும், அதிமுகவைவிட திமுகவையே பெரிதும் டேமேஜ் செய்து வருகிறது.
அதற்கேற்றவாறு, முக்கிய தொகுதிகளில் பாஜகவுடன் திமுக நேருக்கு நேர் மோதுவதும், மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வருகிறது. ஸ்டார் தொகுதியான தூத்துக்குடி, இந்த உச்சக்கட்ட பரபரப்பை தந்துவருகிறது. அதுபோலவே நீலகிரி, மதுரை தொகுதிகளிலும் மிகுந்த எதிர்பார்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..
அண்ணாமலை: இதில், மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் போட்டியிடுவதாலேயே இந்த தொகுதி தேசிய அளவிலும் கவனத்தை பெற துவங்கிவிட்டது. தமிழகத்தில் பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது என்றாலும், கோவையில் நிலவும் போட்டி, தமிழக அரசியல் கட்சிகளுக்கே ஒரு சவாலாகவும் அமைந்து வருகிறது.
அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக, மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கும், பரிசு பொருட்களுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
அண்ணாமலை: இதைத்தான் அண்ணாமலை இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார். "கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது.. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்துதான் தொடங்க போகிறது" என்று கூறியிருந்ததை திமுகவும் கவனிக்காமல் இல்லை.
இப்போது விஷயம் என்னவென்றால், திமுகவுக்கு எல்லா வகைகளிலும் செக் வைப்பதற்கான முயற்சியையும் பாஜக மேற்கொள்ளப்போவதாக, பிரத்யேகமான தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
சிதம்பரம் மகன்: அதாவது, திமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் சிலரின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்றே நினைக்கிறதாம் பாஜக. குறிப்பாக, கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், திருமாவளவன், கார்த்தி சிதம்பரம் (ப.சிதம்பரத்தின் மகன் என்பதால்), வெங்கடேசன் ஆகியோரை குறி வைக்கிறதாம். இவர்கள் மறுபடியும் நாடாளுமன்றத்துக்குள் வரக்கூடாது என்றும் திட்டமிடுகிறதாம்.
அதனால்தான், இவர்களின் தொகுதியில், நடக்கும் பணப்பட்டுவாடா, தேர்தல் செலவுகள் உள்ளிட்டவற்றை கண் கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
செலவுத்தொகை: ஒரு வேட்பாளர் அதிகப்பட்சமாக செலவளிக்கலாம் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகைக்கு அதிகமாக செலவு செய்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில், செலவின பார்வையாளர்கள் ஆதாரங்களை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அதேபோல, ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஆதாரப்பூர்வமாக கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்றும் ரகசிய உத்தரவு பறந்துள்ளதாக தெரிகிறது. அடுத்து என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications