தமிழருவி மணியன் முடிச்சிட்டாரு.. வந்த வேலை சக்ஸஸ்.. இதுதான் பாஜக அண்ணாமலை.. சென்னை ரெடி? அப்ப திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக அடுத்தடுத்த வியூகங்களை வகுத்து சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு பல்வேறு யூகமான விஷயங்களும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் பரபரத்து வருகின்றன. அப்படி ஒரு செய்திதான் இப்போதும் தீயாய் வலம்வருகிறது. என்னவாம்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே அதுவரை அரசியல் ஆலோசகராக இருந்து வந்த மூத்த தலைவர் சோ, மெல்ல மெல்ல ரஜினிக்கும் ஆலோசகராக மாறிய காலம் ஒன்று உண்டு..

Can Thamizharuvi Maniyan contest in Chennai and Did Tamil Nadu BJP Annamalai praise Tamilaruvi Maniyan

ஆலோசனைகள்: எனினும், சூழ்நிலைகள், உடல்நிலை, போன்ற காரணங்களால் சோ மெல்ல ஒதுங்க நேர்ந்துவிட, ரஜினிக்கு ஆலோசனை தர யாருமில்லாமல் தனித்து விடப்பட்டார்... அந்த இடத்தைதான் லபக்கென்று பாய்ந்து பிடித்து கொண்டார் தமிழருவி மணியன். காந்தியவாதியான தமிழருவி மணியனின் ஒவ்வொரு பேச்சும், நோக்கமும் ரஜினியையே சுற்று சுற்றி வர துவங்கியது.

ஒருமுறை தமிழருவி மணியன்பேசும்போது, "இந்த மண் முழுவதையும் அன்பால் ஆர தழுவி அரவணைத்து கொள்ள வேண்டும் எனத் துடித்து தவமிருக்கும் மனிதன்தான் ரஜினிகாந்த். காந்தியவாதி ரஜினி உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த்தான் உண்மையான காந்தியவாதி" என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

ரஜினிகாந்த்: அநேகமாக, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி, ரஜினியை அதிகமாக பேசியது தமிழருவி மணியனாகத்தான் இருக்க முடியும்.. தீவிரமான அரசியலுக்கு ரஜினியை எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டும் என்று பாஜக மறைமுகமாக முயற்சிக்க, இந்த முயற்சியில் தமிழருவி மணியன் நேரடியாக ஈடுபட..... கடைசியில் எதுவுமே நடக்காமல் போய்விட்டது.

எனினும், ரஜினியின் அரசியல் பற்றின பேச்சுக்கள் அடிபடும்போதெல்லாம், தமிழருவி மணியனின் பெயரும் சேர்ந்து எழுந்து அடங்குவதை இன்னமும் தவிர்க்க முடியவில்லை.

காமராஜர்: அதற்கு பிறகு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட தமிழருவி மணியன், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான அரசியலை, தன்னுடைய காமராஜர் மக்கள் கட்சி மூலம் முன்னெடுத்து வருகிறார்..

இப்படிப்பட்ட சூழலில், கடந்த டிசம்பர் மாதம், மீண்டும் தமிழருவி மணியனின் அரசியல் பற்றின பேச்சு சலசலத்தது.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, திடீரென ஒருநாள் சந்தித்து பேசியிருக்கிறார்.. இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை, ட்வீட் ஒன்றினையும் அப்போது பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலை: "கர்மவீரர் காமராஜரால் 'தமிழருவி' பட்டத்தை வழங்கப் பெற்றவர், தனது வசீகரிக்கும் தமிழாலும், கம்பீர சொற்பொழிவுகளாலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, தமிழக அரசியலின் முன்னோடி, எளிமையின் இலக்கணமாக விளங்குபவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வறியாமல் மக்கள் பணிகளை ஆற்றி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அய்யா திரு தமிழருவி மணியன் அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

தலைவர்கள் சந்திப்பு என்பது இயல்பான விஷயம் என்றாலும், அதிமுக - பாஜக கூட்டணி உச்சக்கட்ட பிளவில் இருந்த நேரத்தில், எதற்காக இந்த சந்திப்பு? என்று அப்போது தமிழக அரசியல் களமே பரபரத்துவிட்டது. அதேசமயம் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் கசிய துவங்கின.

கூட்டணி: கடந்த டிசம்பர் மாதத்தில், கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்ட நிலையில், அதிமுகவுடன் யாருமே கூட்டணி வைக்கவில்லை.. ஜிகே வாசன், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம் உள்ளிட்ட பலரும் ஆதரவாக இருந்தார்களே தவிர, கூட்டணியில் உறுதியாக இணைவதாக சொல்லவில்லை.. அதேசமயம், பாஜக பக்கமும் சாயவில்லை..

எனவே, இந்த வாய்ப்பை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பாஜக முயன்றதாகவும், தனக்கு நெருக்கமாக உள்ள சிறு கட்சிகளை பாஜகவில் இணைக்கும் முயற்சியில் தமிழருவி மணியன் ஈடுபட போவதாகவும் தகவல்கள் அப்போது பரபரத்தன. சுருக்கமாக சொல்லப்போனால், பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியிலும், திமுக கூட்டணிக்கு செக் வைக்கும் முயற்சிலும் தமிழருவி மணியன் ஈடுபட உள்ளதாக சலசலக்கப்பட்டது.

தமிழருவி மணியன்: இப்போது, வாசன், ஜான் பாண்டியன், என பலரும் பாஜக பக்கம் வந்துள்ளனர்.. இவர்களாகவே பாஜகவில் இணைந்தார்களா? அல்லது தமிழருவி மணியன் போன்றோரின் முயற்சிகளும் இதற்கு காரணமாக அமைந்ததா? என்பது உறுதியாக தெரியவில்லை.

இப்போது விஷயம் என்னவென்றால், தமிழருவி மணியனுக்கு இந்த முறை சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துவருகின்றன. தமிழருவி மணியனுக்கு சீட் வழங்க வேண்டும் என்று அண்ணாமலை பரிந்துரைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அரசியல் ஆர்வம்: மிகச்சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழருவி மணியனுக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்றாலும்,அரசியல் களத்திற்குள் வரப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும், தேர்தல் நெருங்கி வருவதால், அண்ணாமலைக்கு ஆதரவாக திகழ்ந்து வருகிறார். எனவேதான், பாஜக சார்பில் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிறுத்தலாம் என்று தலைமைக்கு அண்ணாமலை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக இந்த அளவுக்கு தமிழருவி மணியனுக்கு சப்போர்ட் செய்கிறதென்றால், அதற்கு முக்கிய காரணம், எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாதவர் தமிழருவி மணியன்... நேர்மையும், பிரச்சார வலிமையும் உள்ள பேச்சாளர் என்பதால், இந்த முறை வாய்ப்பை வழங்குவதாக நினைக்கிறதாம்..

திமுக: போதாக்குறைக்கு திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்வதால், இதையே மிகப்பெரிய பெரிய பிளஸ் பாயிண்ட்டாக கருதுகிறதாம் தமிழக பாஜக.

அதனால் ஒரு தொகுதியில் நிறுத்தினால், இன்னும் அவருக்கான ஆதரவு கிடைக்கும் என்பதுடன், பாஜகவுக்கும் அது உதவியாக இருக்கும் மேலிடம்வரை "ரெக்கமண்டேஷன்" போயிருக்கிறதாம்... அப்படின்னா, தாமரையில் மலரப்போகிறாரா தமிழருவி மணியன்??? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+