Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டையில் ஓட்டை? அமைச்சரவையில் மீண்டும் மாற்றமா?.. மேலிடம் காதுக்கு போன 3 மேட்டர்.. என்ன நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மறுபடியும் ஒரு மாற்றம் வரப்போவதாக தகவல்கள் இணையத்தில் றெக்கை கட்டி பரபரக்கின்றன.. என்ன காரணம்? என்ன நடக்கிறது கோட்டையில்?
திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே, அமைச்சரவையில் மாற்றம் என்று மாதம் ஒருமுறையாவது செய்திகள் இணையத்தில் வந்துபோவது வழக்கம்.

ஆனால், முதல்வர் அப்படி எதுவுமே செய்யவில்லை.. விமர்சனங்கள், சலசலப்புகள் எழுந்தாலும்கூட, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டித்து வந்தாரே தவிர, பதவியில் இருந்து தூக்கி எறிவது கிடையாது..

Can the DMK government reshuffle the tamilnadu cabinet again and whats happening

விளையாட்டுத்துறை: எனினும், கடந்த டிசம்பர் மாதம் சில மாற்றங்கள் நடந்தன.. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது... அத்துடன், ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்களும் மாற்றப்பட்டன.

ஆனால், முக்கிய இலாக்கா அமைச்சர்கள் யாருமே மாற்றப்படவில்லை.. பிறகு, சமீபத்தில் அமைச்சர் நாசரின் பதவியே பறிக்கப்பட்டது. எனினும், இன்னொரு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. இதில் 3 முக்கியமான துறைகளில் நடந்த கசப்பான சம்பவங்கள், திமுக அரசுக்கு தலைவலியை தந்துள்ளதாக தெரிகிறது..

கள்ளச்சாராயம்: குறிப்பாக, கள்ளச்சாராய விவகாரம், திமுகமீதான இமேஜை டேமேஜ் செய்யும் அளவுக்கு போய்விட்டதாம்.. போதாக்குறைக்கு எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில்எடுத்து, அரசியல் செய்துவிட்டதையும் மேலிடம் கவனிக்காமல் இல்லை. மாவட்ட அமைச்சரான செஞ்சி மஸ்தான் மீதான அதிருப்திகளும் வலுத்து வருவதாக சொல்கிறார்கள்.

அதேபோல, செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட சோதனை விவகாரமும், தர்மசங்கடத்தை திமுகவுக்கு தந்துள்ளதாம்.. அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, டெல்லிவரை எதிரொலித்ததாம்.. முதல்வர் வெளிநாடு சென்ற நேரத்தில் இந்த ரெய்டு நடந்தாலும், சட்டம் - ஒழுங்கு விவகாரத்தை எதிர்த்தரப்பினர் கிளப்பினர்.. இதையடுத்து, தேசிய படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டும் வருகிறது. இதை காரணமாக வைத்தே, மின்துறை பொறுப்பை வேறு நபருக்கு ஒப்படைக்கலாம் என்றும் யூகங்கள் கிளம்பி உள்ளன.

திடீர் ஸ்டிரைக்: போக்குவரத்து துறையில் திடீர் திடீர் ஸ்டிரைக் நடந்ததும் சென்னைவாசிகளை திணடித்துவிட்டது.. தற்சமயம் போராட்டம் இல்லை என்றாலும், இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. அதேபோல, ஆவின் பால் 3 வது நாளாக கிடைக்கவில்லையாம்.. முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடித்து வருகிறது. மற்றொருபக்கம் பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகளிலும் விவகாரங்கள் கிளம்பி உள்ளன.

ரிப்போர்ட்: வழக்கமாக, முதல்வர் கைக்கு, குறிப்பிட்ட மாத இடைவெளியில் துறை ரீதியான ரிப்போர்ட்கள் செல்வது வழக்கம்... அந்தவகையில், தமிழக அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டும் முதல்வர் கைக்கு சென்றுள்ளதாம்.. இதில்தான் சில துறைகளின் மீது புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. உளவுத்துறை தரும் இந்த ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை..

சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசுவாரா? அறிவுறுத்துவாரா? அல்லது துறை ரீதியான மாற்றத்தை செய்வாரா? என்றும் தெரியவில்லை. ஆனால், விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளதால், ஆளும் கட்சிக்குள் புகார்கள், விமர்சனங்கள் இல்லாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார் என்கிறார்கள்..

கோட்டை பரபர: அதேசமயம், சில அமைச்சர்கள் தொடர்ந்து தலைமைக்கு தலைவலியை கொடுத்து வருவதால், இலாக்கா மட்டுமல்லாமல் அமைச்சரவையிலேயே மாற்றம் கொண்டு வரவும் முதல்வர் திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.. வெளிநாட்டுக்கு சென்று திரும்பியுள்ள முதல்வரிடம், உளவுத்துறை ரிப்போர்ட்டும் சென்றுள்ளதால், கோட்டையில் பரபரப்பு எகிறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+