வெளியானது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்.. பாஸ் ஆகாதவர்கள் +2 போக முடியுமா? அதிகாரிகள் சொன்ன விளக்கம்..!
சென்னை : பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் +1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா? என்பது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
2023- 2024 கல்வி ஆண்டுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது மொத்தம் 8 லட்சத்து 1172 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வெழுதிய மாணவ மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
4,26,821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 91.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 7.43 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி சதவீதத்தில் அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வணிகவியல் பாடப்பிரிவில் 86.93% மாணவர்களும், கலை பிரிவுகளில் 72.89% மாணவர்களும், தொழில்பாட பிரிவுகளில் 78.72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதை விட 0.24 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முன்னதாக பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், பிளஸ்-1 தேர்வு முடிவுகளின் 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், 11ம் வகுப்பில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பில் தொடரலாம் என கூறினார்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications