"அடிமடியிலயே".. குண்டை தூக்கி போட்ட பாஜக.. பாஸ் ஆன திடீர் "மெசேஜ்".. டபுள் குஷியில் திமுக..புரியலயே
சென்னை: அதிமுக - பாஜக இடையே கூட்டணி தற்சமயம் முறிந்து விழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன், பாஜக தரப்பிலிருந்து முக்கிய விஷயம் ஒன்று, ஓபிஎஸ் தரப்புக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது.. என்ன அது?
அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லிவிட்டார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக கருத்து: இதனால், கூட்டணி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. கட்சியின் முடிவையே தான் எப்போதும் சொல்வேன் என்று ஜெயக்குமார் கூறியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் கருத்தாகவும், ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது.
மறைந்த முதல்வர் அண்ணாதுரை குறித்து தான் பேசிய கருத்தினை வாபஸ் பெறாமல், விளக்கமளிக்கிறேன் என்கிற பேரில் அண்ணாமலை மீண்டும் சீண்டி பேசியிருந்தார்.. இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஏகத்துக்கும் கோபமடைந்துவிட்டாராம்.
அமித்ஷா - எடப்பாடி: அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு அண்மையில் நடந்து கொண்டிருந்த நிலையில், அண்ணாவை பற்றி அண்ணாமலை சீண்டிய சம்வத்தை எடப்பாடியின் கவனத்துக்கு ஜெயக்குமாரும் கொண்டு சென்றிருக்கிறார்..
அதற்கு எடப்பாடி, "கடுமையாக ஆட்சேபியுங்கள்' என அவருக்கு அறிவுறுத்தியதுடன், சி.வி.சண்முகத்திடமும், அண்ணாமலை கடுமையாக அட்டாக் பண்ணுங்கள் என்றும் கேட்டுக்கொண்டாராம் எடப்பாடி. அதனால்தான் சி.வி சண்முகம், அண்ணாமலையை கொந்தளித்து பேசியிருந்தாராம். இறுதியில் கூட்டணியில் பாஜக இல்லை என்றே அறிவித்துவிட்டார் ஜெயக்குமார். இந்த அதிரடி முடிவுகளால் பாஜக அதிர்ச்சியானதோ இல்லையோ, ஓபிஎஸ் தரப்பு படுகுஷியில் உள்ளதாம்.
3வது அணியா: கடைசிவரை தங்களை கண்டுகொள்ளாமல், பாஜகவால் கழட்டிவிடப்பட்டதால், நொந்து போயிருக்கிறது ஓபிஎஸ் டீம்.. அதனால்தான், 3-வது அணியை அமைப்பதற்கு ஓபிஎஸ் + டிடிவி தரப்பு தயாராகி வருவதாகவும், ஆனால், இதற்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாகவும் செய்திகள் கசிந்தன.. எனினும், ஓபிஎஸ் நிர்வாகிகள் இந்த விஷயத்தில் பாஜக பேச்சை கேட்க போவதில்லையாம்.
நம்பி நம்பி மோசம் போயாச்சு, இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்ணுவது வேஸ்ட் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் தரப்புவந்துவிட்டார்களாம்.. அதனால்தான் ஒரு டிவி சேனலுக்கு மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தந்த பேட்டியில், "நாங்கள் தனித்து நிற்போம் என்றும், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை என்றும்" அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.
தனிக்கட்சி: அதுமட்டுமல்ல, தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓபிஎஸ்ஸிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்களாம்.. ஆனால், இதற்கு ஓபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.. தனிக்கட்சியை ஆரம்பித்துவிட்டால், அதிமுகவுக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதுபோல் ஆகிவிடும், அதனால், வேற ஐடியா ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், என்று நிர்வாகிகளிடம் சொன்னாராம்.
தனிக்கட்சி: தனிக்கட்சியை ஓபிஎஸ் துவங்காவிட்டாலும், தினகரன், ஓபிஎஸ் இருவருமே சேர்ந்து ஓர் அணியில் திரள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இதனால் தென்மண்டலத்தில், அதிமுக ஓட்டுக்கள் சிதறிப்போய், திமுகவுக்கே சாதகமாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான், ஓபிஎஸ், தினகரனை தனித்து செயல்பட வேண்டாம் என்று பாஜக கேட்டுக் கொண்டதாம்.
அதுமட்டுமல்ல, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஓபிஎஸ் தினகரன் தரப்புக்கு, பாஜக தரப்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. எனவே இது தொடர்பாக விரைவில் நிர்வாகிகளுடன் இருவருமே ஆலோசிப்பார்கள் என்று தெரிகிறது. வழக்கமாக பாஜக சொல்லும் எந்த முடிவுக்கும், ஓபிஎஸ் சிவப்பு கம்பளம் விரித்து ஆதரவு தெரிவித்துவிடும் நிலையில், பாஜகவின் இந்த அறிவுறுத்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை.
இந்த நேரத்தில், நாம் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், நம்முடைய ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், ஓபிஎஸ் குறித்து சில விஷயங்களை பேசியிருந்ததையும் இங்கு நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
பாஜக: "பாஜகவே எங்களை வெளியே அனுப்பும்வரை, நாங்கள் வெளியே போக மாட்டோம், பாஜகவுடன்தான் இருப்போம் என்று ஓபிஎஸ் சொல்வதே, ரொம்ப கேவலமா இருக்கு. கழுத்தை புடிச்சு பாஜக வெளியே தள்ளினால்தான் போவீங்களா? அப்படின்னா, பாஜகவை விட்டால் உங்களுக்கு வேற வழி இல்லையா? பாஜகவை நம்பித்தான் பொழப்பு ஓடுது என்று பன்னீர்செல்வம் நினைப்பது தவறு.
தினகரன்தான் உங்களுடன் இருக்கிறாரே, தனித்து போட்டியிடுங்கள்.. ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3பேரும் சேர்ந்து, குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது, வேட்பாளர்களை நிறுத்தினால், நிச்சயம் பாஜக & எடப்பாடி அணி தோல்வியை தழுவும்.. இது பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.. அதனால்தான், கடைசியாக ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறது.
ஓபிஎஸ் + தினகரன்: இந்த விஷயத்தில் ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேருமே ஏமாந்துவிடக்கூடாது. மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும். அதற்கான தளத்தை இப்போதே உருவாக்க வேண்டும்" என்று ப்ரியன் நம்மிடம் அன்று பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஆக.. ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்கினால், திமுகவுக்கான களம் சாதகமாகிவிடும் என்று பாஜக நினைக்கிறது.. ஏற்கனவே, திமுகவின் B டீம் என்று ஓபிஎஸ்ஸை, அதிமுக தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் இனி எப்படி நகர போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
AMMK: அமமுக வேட்பாளர் ஆன பார் கவுன்சில் துணை தலைவர்.. யார் இந்த கார்த்திகேயன்? -
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளித்த டிடிவி தினகரன் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications