சல்லி சல்லியா போதே.. "சீக்கிரம் கிளம்புங்க".. திமுக, அதிமுக ஓட்டுக்கு செக்? பின்னாடி 2 பேர் வர்றாங்க
சென்னை: அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில், பாஜகவோ ஜரூர் வேகத்தை கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, தென்மண்டலத்தில் பல்வேறு வியூகங்களை செயல்படுத்தவும் முனைப்பு காட்டி வருகிறதாம்.
பாஜக தனித்து போட்டியிட போகிறதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட போகிறதா? என்று தெரியவில்லை. ஆனால், ஓபிஎஸ், + டிடிவி தினகரன் + சசிகலா என 3 பேரின் ஆதரவையுமே ஒருசேர பெற்றிருக்கிறது. அந்தவகையில், இவர்கள் 3 பேருடன், மேலும் சில கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கவும் பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் வாக்குகளை வெகுவாக பிரித்து, திமுகவை பெரும்பான்மையான வெற்றியை பெற முடியாமல் செய்ததில், அமமுகவுக்கு பெரும்பங்கு உள்ளது..
ஒன்றிணைந்த அதிமுகவாலேயே, தினகரனின் வாக்கு வங்கியை, சாய்க்க முடியாதபோது, இந்த முறை எடப்பாடி பழனிசாமியால், தனித்து நின்று அமமுகவின் வாக்குகளை சிதறடிக்க செய்வது சந்தேகம்தான் என்கிறார்கள். அதனால்தான், தினகரனுக்கான ஆதரவை அபரிமிதமாகவே பாஜக தந்திருப்பதாக தெரிகிறது.
அமமுக: எப்படியும் அமமுகவுக்கு 4 சீட்வரை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.. அத்துடன், தேர்தல் செலவு உள்ளிட்ட விஷயங்களையும் மேலிடமே கவனித்து கொள்வதாக, தினகரனிடம் உறுதி தந்திருக்கிறதாம் மேலிட பாஜக.. அதுமட்டுமல்ல, தேனி தொகுதியை தினகரன் கேட்பதாக தெரிகிறது. இதற்கும் மேலிட பாஜகவும் ஒப்புக் கொண்டுவிட்டதாம். இனிவரும் நாட்களில், தினகரனின் வியூகம் தேனியை சுற்றியே அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
தினகரனுக்கு தேனியை ஒதுக்கும்பட்சத்தில், ஓபிஎஸ் தரப்புக்கு ராமநாதபுரத்தை ஒதுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், ராமநாதபுரத்தில் போட்டியிடுவது யார்? ஓபிஎஸ்? அல்லது அவரது மகன்களா? அப்படியே ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட்டாலும், எந்த சின்னத்தில் நிற்க போகிறார்? இரட்டை இலை முடக்கப்படுமா? அல்லது தனி சின்னமா? அல்லது தாமரை சின்னமா? என்பது குறித்தும் தெரியவில்லை.
ஓபிஎஸ்: ஒருவேளை, ஓபிஎஸ்ஸுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டால், அதை மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்பாரா? என்பது சந்தேகம்தான். காரணம், புரட்சி பயணத்தை ஓபிஎஸ் கடந்த மாதம் துவங்கியிபோது, "நாங்கள் தனித்து நிற்போம், திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்" என்று குண்டை தூக்கி போட்டிருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். எனவே, தாமரை சின்னத்தை ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்க நேர்ந்தால், இதுவே எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரியாக வெற்றியாக பார்க்கப்பட்டுவிடும்.
அதேபோல, சசிகலாவை பொறுத்தவரை, தென்மண்டல வாக்குகளை குறி வைத்து, இந்த எம்பி தேர்தலில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள போகிறாராம். அத்துடன் 2 சீட்டுகளை தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒதுக்கும்படி ஒரு டிமாண்டு வைத்திருக்கிறாராம்.
ஆனால், பிரச்சாரத்தின்போது சசிகலாவும்சரி, ஓபிஎஸ்ஸும்சரி, என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள்? அதிமுகவுக்காக ஓட்டு கேட்க முடியாது.. இரட்டை இலைக்கும் ஓட்டு கேட்க முடியாது.. வெளிப்படையாக பாஜகவுக்கு ஓட்டு கேட்பார்களா? இதை அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா? என்பதெல்லாம் குழப்பமாகவே உள்ளது.
அதிருப்தி: எனினும், வரும் தேர்தலில் எப்படியாவது திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை அள்ளுவதுடன், அதிமுகவின் வாக்குகளையும் உடைத்து, எடப்பாடி பழனிசாமியை 3வது இடத்துக்கு தள்ள வேண்டும் என்பதே இவர்கள் அனைவரின் திட்டமாக உள்ளது.
3வது இடத்துக்கு எடப்பாடி பழனிசாமியை கொண்டு சென்றுவிட்டாலே, அதிமுக தங்களுடைய கைக்கு வந்துவிடும் என்றும் கணக்கு போடப்படுகிறதாம். பாஜகவுடன் சேர்ந்து, எடப்பாடிக்கு எதிரான காய்நகர்த்தலை, தினகரன் தரப்பு கையிலெடுத்துள்ளதால், அதிமுகவில் சில புள்ளிகளுக்கு நெருக்கடிகள், நெருங்கிவிட்டதாகவே சொல்கிறார்கள்..
சமாளிப்பாரா?: ஒருபக்கம் டிடிவி தினகரன், மறுபக்கம் ஓபிஎஸ், இதற்கு நடுவில் சசிகலா என 3 பக்கமும் பாஜகவுடன் கைகோர்ப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இவைகளை எடப்பாடி பழனிசாமி எப்படி முறியடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கூடிவருகிறது.. ஒருவேளை தினகரன் தேனி தொகுதியில் நிற்கும்பட்சத்தில் அல்லது ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் நிற்கும் பட்சத்தில், முக்குலத்தோர் வாக்குகளை அதிமுகவுக்குள் எப்படி கொண்டு வரப்போகிறார்? என்பதிலும் கூடுதல் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications