"சூழ்கிறது மேகங்கள்".. அங்கே "பச்சைக்கொடி" காட்டிய திருமா.. வண்டிய "அறிவாலயம்" திருப்பும் அன்புமணி?
திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புகள் கூடிவருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்
சென்னை: திருமாவளவன்நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசியிருந்த கருத்துக்கள்தான், தமிழக அரசியல் களத்தை தகிக்க வைத்துவருகிறது. இதுகுறித்த சந்தேகங்களும்,யூகங்களும் வலம்வரவும் துவங்கிவிட்டன.
பாஜகவை தொடர்ந்து சாடி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன்.. மேலும், பாஜகவின் அபாயம் குறித்து எடுத்துகூறி, அதிமுகவை எப்போதுமே அலர்ட் செய்து வருகிறார்.
ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும் என்று கூறிவருகிறார்.

கட்சி சிதறல்கள்
குறிப்பாக, "அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும்.. அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும்.. பாஜக தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்தனர்.. இப்போது அவங்களையும் உடைத்து விட்டார்கள்" என்றும் திருமாவளவன் பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்

திருமா சுருக்
இந்நிலையில்தான், கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக இடையே மோதல் வலுத்து வருகிறது.. அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணைய துவங்கி உள்ளனர்.. "நாங்களும் உங்களை மாதிரியே அரசியல் செய்வோம்" என்று அண்ணாமலை, அதிமுக மேலிடத்துக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ள நிலையில், இந்த மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அதிமுகவை பற்றி கவலைப்பட்டு, மீண்டும் தன்னுடைய கருத்துக்களை ஆலோசனையாக பதிவு செய்திருந்தார் திருமாவளவன்.

கிளைமேட் சேஞ்ச்
"அதிமுகவில் இல்லாமல் பாஜக தனியே போவதற்கு வாய்ப்பு கிடையாது. பாஜக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. அதனால், அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும் என்பது கட்டாயம். எப்படி இருந்தாலும் அதிமுகவை தனித்து செயல்பட விட மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. அது பாஜகவுக்கு தான் பயனளிக்கும். அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு. பாஜகவை கழற்றிவிட வேண்டும். பாஜக இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது என்றார்.

சூசக செம்மலை
திருமாவளவன் இப்படி சொன்னதுமே, அதிமுக மூத்த தலைவர் செம்மலையிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு செம்மலை, "எதிர்காலத்தில் எது நல்லது என்பதை தீர்க்கமாக முடிவெடுக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி" என்று சூசகமாக பதிலளித்தார்.. ஒரே நேரத்தில், திருமாவளவன் பேசியதையும், அதற்கு செம்மலை தந்த பதிலையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது என்கிறார்கள்.. காரணம், விசிகவை பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய அளவில் களவாடி வருகிறது. அக்கட்சிக்கென வலுவான வாக்கு வங்கியும் உள்ளன.. தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தை இறுக்கமாக தக்க வைத்தும் வருகிறது.

ஜாக்கிரதை
எனினும், திமுக அரசுடன் சமீபகாலமாகவே, அதிருப்தியுடன் விசிக பயணிப்பதாகவும் கூறப்படுகிறது.. அதனால்தான், திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக போவதாகவும், வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு முயல்வதாகவும் கடந்த ஒரு வருட காலமாகவே அரசல்புரசலான தகவல்கள் அவ்வப்போது மீடியாவில் வெளியாகி கொண்டே இருக்கின்றன.. அதேசமயம், பாஜக, பாமக இந்த இரு கட்சிகளும் இருக்கும் இடத்தில் விசிக கூட்டணி வைக்காது என்பதையும் திருமாவளவன் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருவதுடன், "பாஜகவுடன் ஜாக்கிரதையாக இருங்கள்" என்றும் அதிமுகவுக்கு வார்னிங் தந்துகொண்டே உள்ளார்.

அச்சாரம்
தற்போது அதிமுக கூட்டணிக்குள் மோதல் வெடிக்கவும், இந்த சந்தர்ப்பத்தை திருமாவளவன் பயன்படுத்தி கொள்வதாக கூறுகிறார்கள். நேற்றைய தினம் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான தராசு ஷ்யாம், ஒரு சேனலுக்கு இதை பற்றி பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "திருமாவளவன் அதிமுகவுக்கு சொல்லியிருப்பது ஆலோசனையா? அறிவுரையா? என்பதைவிட "அச்சாரம்" என்றே சொல்லலாம்.. அணி மாறுதல் என் கண்ணுக்கு புலப்படுகிறது.. அதிமுக - பாஜக கூட்டணிக்குள் ஒரு பிரச்சனை நடக்கிறது என்றால், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்றவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கூட்டணி மேகங்கள்
திருமா இப்படி பேசுவதால், அது அரசியலில் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படும்.. அப்படி புரிந்து கொண்டாலும் பரவாயில்லை என்பதால்தான், திருமாவளவன் தன்னுடைய கருத்தை பொதுவெளியில் இப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதனால், திமுகவில் இருந்து விலகக்கூடிய சிந்தனை விசிகவுக்கு இருக்கிறது என்றே தெரிகிறது. அதேபோல, பாஜக தங்கள் கூட்டணியில் இல்லாமல் போனால், மேலும் பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் வந்து சேரும் என்கிற எண்ணம் எடப்பாடிக்கும் உண்டு.. அந்தவகையில் தற்போது கூட்டணி மேகங்கள் மாறுகின்றன.. காட்சிகளும் மாறுகின்றன..

+ 5 சீட்
"நீங்கள் பாஜகவில் இருந்து விலகி வந்துவிட்டால், நான் உங்களுடன் வந்துவிட தயார்" என்ற சூசகம் போலவும் திருமா பேசுவதை எடுத்து கொள்ளலாம்... அந்தவகையில், பச்சைக்கொடி காட்டுகிறார் திருமாவளவன்.. பாஜகவை பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றாலும் அவர்களுக்கு 5-க்கு மேல் சீட் தர வழியில்லை.. அதனால், 2014ல் ஏற்படுத்திய தனிக்கூட்டணி போல இப்போது ஏற்படுத்த முயலலாம்.. அதாவது, ஓபிஎஸ் + அமமுக + புதிய தமிழகம் + ஜான்பாண்டியன் + புதிய நீதிக்கட்சி இப்படி அந்த தனிக்கூட்டணி அமையலாம்..

பச்சைக்கொடி
இந்த விஷயத்தில் பாமக என்ன முடிவெடுக்க போகிறது என்பது அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்துதான் நம்மால் புரிந்து கொள்ள முடியும். காரணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் எல்லாம் பாமகவால் எளிதாக வெல்ல முடியும். அதனால் அவர்கள் எந்த கூட்டணியில் இடம்பெற்றாலும் பாமகவுக்கு பிளஸ்தான். ஒருவேளை, பாமக, திமுக கூட்டணிக்குள் வருவதற்கான சூழல் அமைந்து வரலாம்.. அது தொடர்பாக சூசகமான தகவல், அடிமட்டத்தில் இருந்து, விசிக தலைமைக்கு கிடைத்திருக்கலாம். இல்லாவிட்டால் இப்படி வெளிப்படையாக திருமாவளவன் சொல்லி இருக்க முடியாது. இத்தனைக்கும் தான் பேசுவது, திமுக கூட்டணிக்குள் பிரச்சனையை, சலசலப்பை ஏற்படுத்தும், என்று தெரிந்துதான் சொல்கிறார்" என்று தன் கருத்தை பதிவு செய்திருந்தார் ஷ்யாம்.

கலைகிறதா மேகம்
ஆக, திருமாவளவன் நேற்றைய தினம் பேசியிருப்பது கூட்டணிக்கான அச்சாரமா? பச்சைக்கொடியை காட்டுகிறாரா? நிஜமாகவே அதிமுகவுடன் விசிக கூட்டணி வைக்க போகிறதா? அப்படியானால் திமுக கூட்டணிக்குள் பாமக என்ட்ரி தரப்போகிறதா? பாஜகவை அதிமுக கழட்டிவிட துணிந்துவிட்டதா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் நமக்கு விடை கிடைக்கவில்லை.. "மேகங்கள் மாறுகின்றன" என்று தராசு ஷ்யாம் சொல்வது போலவே இந்த நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், இந்த மேகக்கூட்டங்கள் எல்லாம் ஒன்றுகூடி "கூட்டணி மழையாக" பொழியுமா? அல்லது மேகங்கள் கலைந்து செல்லக்கூடுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..
-
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
Ramadoss: சேலம் பிரசார மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்.. மருத்துவமனையில் அனுமதி! -
செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்! -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம்












Click it and Unblock the Notifications