Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை குத்திட்டாங்களே".. அடுத்த அவதாரம் ரெடி.. "அங்கே" போனை போட்ட விஜய பிரபாகரன்.. நிமிரும் "முரசு"

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன.. ஆனால், தேமுதிக உட்கட்சி விவகாரங்களை கையில் எடுத்துள்ளது.. அதற்கான களப்பணியிலும் இறங்கி உள்ளது.. வரப்போகும் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், தேமுதிகவின் சமீபத்திய நடவடிக்கைகள் பலரது கவனத்தையும் திருப்பி வருகின்றன.. என்ன நடக்கிறது தேமுதிகவில்?

இந்தமுறை இடைத்தேர்தலின்போது, தேமுதிக போட்டியிடாது என்றே அனைவரும் நினைத்தார்கள்.. எப்படியும் பாமக போல ஒதுங்கி கொள்ளும் அல்லது யாராவது ஒரு கட்சிக்கு ஆதரவை தரும் என்றும் கணிக்கப்பட்டது..

ஆனால், திடீரென போட்டியில் குதித்தது.. பாஜக, அமமுக, பாமக போன்ற கட்சிகளே, போட்டியிடாமல் ஒதுங்கி கொண்ட நிலையில், துணிந்து களமிறங்கியது தேமுதிக.

விஜயகாந்த்

விஜயகாந்த்

எப்படியும் இடைத்தேர்தலில், தேமுதிக டெபாசிட்டை வாங்க முடியாது என்பதை பிரேமலதா முன்கூட்டியே அறியாமல் இல்லை.. ஆனாலும் அவரது 'அரசியல் கணக்கு' என்பது வேறாகத்தான் இருந்தது.. இந்த ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை, விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் ஏராளம்.. தொண்டர்களும் ஏராளம்.. அதனால்தான், கடந்த 2011 தேர்தலின்போது, திமுகவை இந்த தொகுதியில் தோற்கடித்தது தேமுதிக.. இப்போதும் விஜயகாந்த்துக்கான ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதாலேயே, முழுக்க முழுக்க அவர்களை நம்பியே பெரிதும் களமிறங்கியது தேமுதிக.. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு எந்த அளவுக்கு தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்க முடியுமோ அவ்வளவும் எம்பி தேர்தலில் தங்களுக்கு உதவும் என்றும் கணக்கு போட்டது.. அதைவிட முக்கியமாக, விஜய பிரபாகரனை முன்னிறுத்தும் தேர்தலாகவே இதை பயன்படுத்தி கொள்ள தேமுதிக திட்டமிட்டது.

கொடுமைங்க

கொடுமைங்க

4வது இடத்தை பெற்று, டெபாசிட்டை தேமுதிக இழந்தது என்றாலும், வரப்போகும் தேர்தலில் இக்கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாகவே ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசும்போது, "எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டுள்ளனர். என்ன கொடுமை இது? முன்னாள் முதல்வர் மீது இப்படியா வழக்கு போடுவார்கள்? இந்த அரசு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் வழக்கு போட நினைத்து இருந்தால் வேறு விஷயங்களில் போட்டு இருக்கலாம். ஏன் செல்போன் திருட்டு வழக்கை போடுகிறார்கள்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

பிரேமலதாவின் இந்த ஆதங்கமும், அதிருப்தியும், அதிமுகவுக்கான ஆதரவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. அப்படியானால், அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க போகிறதா? என்ற சந்தேகத்தையும் கிளப்பி விட்டு வருகிறது.. உண்மையிலேயே தேமுதிகவுக்குள் என்னதான் நடக்கிறது? யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்பது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.. அவர்கள் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

விஜயகாந்த் மனசு

விஜயகாந்த் மனசு

"நடந்து முடிந்த இடைத்தேர்தலில் நாங்கள் டெபாசிட்டை இழந்தது உண்மைதான்.. ஆனால், எங்களுக்கு இந்த தோல்வி புதுவிதமான உற்சாகத்தையே தந்தது.. காரணம், வரப்போகும் எம்பி தேர்தலை முன்னிட்டு, களப்பணியில் கடந்த சில மாதங்களாகவே தேமுதிக நிர்வாகிகள் நாங்கள் இறங்கி வருகிறோம்.. உட்கட்சி தேர்தலை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.. பூத்வாரியாக வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. தொய்வை சரிப்படுத்தும் சரிப்படுத்தும் வேலையில் இறங்கிய நேரத்தில்தான், திடீரென இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.. போட்டியிடாமல் ஒதுங்கிவிடக்கூடாது என்பதற்காகவும், விஜயகாந்த் தொண்டர்களும், ரசிகர்களும் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதற்காகவும்தான், இந்த இடைத்தேர்தலை சந்திப்பதாக அறிவித்தோம்..

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தம்

டெபாசிட்டை கூட நாங்கள் வாங்கவில்லை என்கிறார்கள்.. உண்மைதான்.. ஆனால், இந்த தேர்தல் எங்களுக்கு சில பாடங்களையும், பொறுப்புகளையும் உணர்த்தி விட்டு போயுள்ளது.. விஜயபிரபாகரனின் அரசியல் எழுச்சி இந்த இடைத்தேர்தலில்தான் முழுமையாக எங்களுக்கு வெளிப்பட்டது.. ஈரோடு கிழக்கில் மரப்பாலம் பகுதியில் வாக்கு சேகரிக்க போன விஜயபிரபாகரனை பார்த்ததுமே, அந்த பெண்கள் ஓடிவந்து கட்டிப்பிடித்து கொண்டு, அவரது கன்னத்தை தடவி அழ ஆரம்பித்துவிட்டார்கள்.. "பார்க்கிறதுக்கு அப்பா மாதிரியே இருக்கிறீயேப்பா.. அவரை மாதிரியே செயல்பாட்டிலும் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி" என்று கண்ணீர் விட்டு அழுது, அரவணைத்த சம்பவத்தை யாராலும் மறுக்க முடியாது.

பச்சைக்குத்தி

பச்சைக்குத்தி

அவ்வளவு ஏன், தொகுதியில் பிரச்சாரம் செய்ய போகும்போது, விஜயகாந்த்தின் தீவிரமான தொண்டர்கள் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்டோர் அவர்களது கையில் "கேப்டன்" என்று பச்சைக் குத்தி கொண்டிருந்ததை பார்த்து விக்கித்தே உறைந்து நின்றுவிட்டோம். இப்படிப்பட்ட தீவிரமான தொண்டர்கள்தான், எங்களை இன்னமும் இயக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.. அத்துடன், விஜய பிரபாகரனின் பக்குவமும், முதிர்ச்சி அரசியலும் கூடியுள்ளதும் கட்சிக்கு தெம்பை தந்து கொண்டிருக்கிறது.. அதனால்தான், இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு, 2 விதமான புது வியூகங்களை தேமுதிக எடுத்து வருகிறது..

அவதாரம் ரெடி

அவதாரம் ரெடி

முதலாவதாக, விஜயகாந்த்தின் தீவிரமான ரசிகர்கள், தொண்டர்கள், சோர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, களப்பணியில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளார் விஜயபிரபாகரன்.. நிர்வாகிகளுக்கு நேரடியாகவே போன் போட்டு பேசி வருகிறார்.. "என்ன பண்றீங்க? அந்த தொகுதியில் மக்களிடம் நெருங்கியிருக்கும்படியான பிரச்சனைகளை கையில் எடுங்கள், அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்று எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்" என்று எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் கேட்கிறார். விஜயகாந்தின் அதே உத்வேகம், அதே பாசம், விஜயபிரகாரனிடம் இருப்பதால், "அடுத்த அவதாரம் ரெடி" என்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்..

விஜயபிரபாகரன்

விஜயபிரபாகரன்

அடுத்ததாக, தேமுதிக தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை விரைவில் நடத்த போகிறோம்.. அதற்கான அறிவிப்பினை தலைமை வெளியிடும்.. நடந்து வரும் களப்பணிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், எம்பி தேர்தலுக்கான கூட்டணி சம்பந்தமான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை நடத்த போகிறோம்.. தேமுதிக கூட்டணி குறித்து, தற்போது மீடியாக்களில் பொய்யான தகவல்கள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.. எல்லாமே வதந்திகள்.. இப்போதைக்கு கூட்டணி பற்றி எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை.. மாறாக, கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று முடித்து கொண்டனர் தேமுதிக நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+