"டாப் 2"..யாரந்த 2 பேர்.. துண்டு சேருது போலயே.. கரைகிறதா பழனிசாமியின் பிடிவாதம்.. மன்னார்குடி "மூவ்"
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை தளர்த்த, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம் சசிகலா தரப்பு.. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான வைத்திலிங்கம் மகன் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது.. இந்த திருமண விழாவில் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ்., திவாகரன் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி தங்கள் பலத்தை காண்பிக்க வைத்திலிங்கம் நினைத்திருந்த நிலையில் அது நிறைவேறாமல் போய்விட்டது.
சிகிச்சை: சசிகலாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால், இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிறார்கள்.. ஆனாலும் ஓபிஎஸ் - தினகரன் 2 பேருமே ஒரே மேடையை அலங்கரித்ததும், கல்யாண வீட்டில் நெருங்கியே பின்னிப்பிணைந்து கிடந்ததும், ஒன்றாக உட்கார்ந்து விருந்து சாப்பிட்டதும், இரு தரப்பு தொண்டர்களுக்குமே மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறதாம்.

அநேகமாக உடல் நலம்தேறிய பிறகு சசிகலாவும், இவர்களுடன் இணைவார் என்கிறார்கள்.. எனினும், அதுமுகவை விட்டுத்தர இப்போதுவரை சசிகலாவுக்கு மனமில்லையாம்.. கொஞ்ச நாட்களாகவே நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் ஓபிஎஸ்ஸூக்கு சறுக்கலையும், பின்னடைவையும் தந்தாலும், அவரும் எப்படியாவது அதிமுகவில் இணையும் முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறாராம்.. "ஒரு சிலரை தவிர பிரிந்து சென்ற அனைவரும் அதிமுகவில் வந்து சேரலாம்" என்று எடப்பாடி சொல்லியபடியே இருக்கிறார்.
தூது: சசிகலா தினகரன் இவர்கள் 2 பேரையுமே மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்கிறார் என்று சசிகலா தரப்புக்கே தெரியுமாம். ஆனாலும், இதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து, சசிகலா தூது விட்டுக் கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன... காரணம், அதிமுகவில் மறுபடியும் எப்படியாவது நுழைந்து பயணம் செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் உண்டு என்பதை சசிகலா முழுமையாக நம்புகிறார்.
அதனாலேயே ஒருபக்கம் தூது நடவடிக்கையும், மறுபக்கம் ஓபிஎஸ்ஸை சந்திக்காமல் தவிர்த்துவருதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. அதிமுகவின் மாஜி அமைச்சர்கள்தான், இந்த தூது நடவடிக்கைக்கு உதவியாக இருந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.. அவர்கள் மூலமாக பேச்சு நடத்தி எப்படியும் அதிமுகவில் சேர்ந்துவிட வேண்டும் என்று சசிகலா வியூகம் அமைத்து வருகிறார்.
ஆனால் சசிகலா குடும்பத்தினரை மறுபடியும் கட்சிக்குள் கொண்டு வந்தால், ஒற்றை ஆளுமை பறிபோய்விடும் என்ற கலக்கம் எடப்பாடிக்கு நிறையவே இருக்கிறதாம்.. எப்படியாவது ஓபிஎஸ்ஸை மட்டும் உள்ளே கொண்டுவந்துவிடலாம் என்று, சில மூத்த தலைவர்கள் எடப்பாடியிடம் சொன்னார்களாம்.. ஆனால், எடப்பாடிதான் அவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்கவில்லையாம்.
மன்னார்குடி: காரணம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் மீண்டும் அழைத்து வந்தாலும், தினகரன், சசிகலாவுடனான தொடர்பையே நாடி செல்வார் என்பதைதான் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்திருந்தார்.. இன்னும்சொல்லப்போனால், ஓபிஎஸ்ஸை அன்று அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கிவைக்க காரணமே, பாஜக + மன்னார்குடி குடும்பம் என்றார்கள்.
ஆனால், சசிகலாவின் வியூகங்கள் இந்த 2 வருட காலமாகவே எடுபடாத சூழலில், சசிகலாவை வைத்து அதிமுகவுக்கு எந்தவித செல்வாக்கும் வந்துவிடப் போவதில்லை என்று உறுதியாக சொல்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.. அதனால், சசிகலாவின் இந்த தூது நடவடிக்கைகளை எல்லாம் எடப்பாடி பொருட்படுத்தமாட்டார் என்றும் சசிகலா உள்ளிட்ட அவரது ஆட்கள் யாரை உள்ளே விட்டாலும் நமக்கு ஆபத்து என்பதை நிச்சயம் உணர்ந்துள்ளார் என்று சொல்கிறார்கள்.. இதேபோல ஒரு தூது நடவடிக்கையை ஓபிஎஸ் தரப்பும் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
மேலிடம்: இவர்கள் சொல்வதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மேலிடம் என்ன சொல்ல போகிறதோ? எத்தகைய நெருக்கடிகளை கொண்டு வந்து செக் வைக்க போகிறதோ? என்ற எதிர்பார்ப்பும் அதிமுகவுக்குள் இருக்கத்தான் செய்கிறது..!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications