கிராம நத்தம் பட்டா.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி? குறைந்த கட்டணத்தில் ரொம்ப ஈசி
சென்னை: புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா கிடைக்குமா? கிராம நத்தம் பட்டாக்களை எப்படி பெறுவது? இதைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
அரசுக்கு சொந்தமான நிலங்களையே புறம்போக்கு நிலம் என்கிறோம்.. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, விளைநிலம் ஆக்கப்படாத இடத்தை ஏரிகுளம் என்றும், பொதுவாக உள்ள இடத்தை எல்லாரும் உபயோகிப்பதால், புறம்போக்கு நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டது.

இவைகளில், தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு இப்படி அனைத்துமே பொதுப்பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் அனைத்தும் புறம்போக்கு நிலங்கள எனப்படுகிறது. அதாவது, பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை, புறம்போக்கு நிலம் என்பார்கள். ஆனால், இவைகளில் விவசாயம் செய்யமுடியாது.
புறம்போக்கு நிலம்: இதில் பலவகையிருந்தாலும், நத்தம் என்பதில் மட்டும், மக்கள் வீடு கட்டிக்கொள்ள அரசு அனுமதி தந்திருக்கிறது. அதேபோல, புறம்போக்கு நிலத்தை 5 வருடங்களுக்கு மேல் வைத்திருந்தால் அந்த நிலத்திற்கும் உரிமை உள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், அரசுக்கு தேவையில்லாத புறம்போக்கு நிலத்தில் தங்கியிருந்தால், அவர்கள் பட்டா பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று கருதப்படுவார்கள். இவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டாக்களும் தரப்படும்..
கிராம நத்தம் நிலங்கள்: அதேபோல, கிராம நத்தம் நிலங்களை பொறுத்தவரை, ஏழை மக்கள் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் ஒதுக்கப்பட்டு வந்தன.. இவைகளை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது..
இதில் சில சிக்கல்கள் எழுந்ததால், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது. தற்போது நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதியையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பட்டா மாறுதல் செய்வது மட்டுமின்றி, உட்பிரிவு செய்வது உட்பட எல்லாவற்றையுமே குறைவான கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
eservices.tn.gov.in என்ற வெப்சைட்டிற்குள் அடையாளச் சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து பட்டா விண்ணப்பித்து, டவுன்லோடும் செய்து கொள்ளலாம். இதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பயன்படுத்தலாம்.
- https://eservices.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்குள் நுழைய வேண்டும்
- பட்டா / சிட்டா உள்ளிட்ட விவரங்களை பார்வையிட என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்
- இப்போது ஸ்கிரீனில், உங்களுடைய விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.. முக்கியமாக, உங்களுடைய மாவட்டத்தின் பெயர்,
நீங்கள் இருக்கும் வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர், நிலத்தின் வகை, நிலத்தின் புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை சரியாக பதிவிட வேண்டும்.
- அதேபோல, ஊரகமா? நத்தமா? என்ற ஆப்ஷன்களையும் நிரப்ப வேண்டும். அதாவது ஊரகம் என்றால் உங்களுடைய வயல் சார்ந்த இடங்கள் என்று பொருள்.. நத்தம் என்றால் உங்கள் வீடு சார்ந்த நிலங்கள் என்று அர்த்தம், கொடுக்க வேண்டும்.
- இறுதியில் கேப்சா எண்ணை பதிவிட்டு, "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால், உங்களுடைய நத்தம் நிலத்தின் பட்டாவை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே காணலாம், இதனை அப்படியே டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.
சிலருக்கு கிராம நத்தம் நிலத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்பதில் குழப்பம் வரலாம்.. கண்டிப்பாக வாங்கலாம்.. ஆனால், குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் இருந்தால், வாங்கலாம்..
ரயத்துவாரி: அதுமட்டுமல்ல, கிராம நத்தம் நிலத்தினை ரயத்துவாரி நிலம் என்றும் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. காரணம், நத்தம் நில வகைகளை கணினிமயமாக்கும் பணிகளை எளிதாக்க வேண்டும் என்பதற்காக, ரயத்துவாரி மனை என ஒரே வகை பெயரிட்டு அழைக்கலாம் என்று, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications