தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற முடியுமா? இப்படியும் சில வழிகள் இருக்கு.. உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காணாமல் போனவரின் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற முடியுமா? பட்டா பெற முடியும் என்பதே பதில். ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

பொதுவாக அரசு பயன்படுத்தாத புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு நிலத்தை (அரசின் நிலத்தை) ஆக்கிரமித்து குடியோருப்போருக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்கிற பட்சத்தில் அரசு அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கும். ஆனால் காணாமல் போனவரின் நிலத்தையும் சில நேரங்களில் மக்கள் ஆக்கிரமிக்கிறார்கள்.

Can you occupy the land of the missing person and get a patta? how did get patta?

பல ஆண்டுகளாக ஒரு நிலத்தை யாரும் உரிமை கோராத நிலையில், அதை புறம்போக்கு நிலமாக கருதி மக்கள் ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஆக்கிரமித்தவர்கள் பட்டாவை பெறுகிறார்கள். ஆனால் அதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஏனெனில் அரசு துறை நிலத்தை போல் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெறுவது என்பது எளிதான காரியமல்ல. ஆனாலும் முடியும் என்பதே உண்மை.

சரி ஒருவர் எப்படி தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா வாங்குகிறார் என்பதை பார்ப்போம். தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அவர் தலையீடு இன்றி, வேறு ஒருவர் தொடர்ந்து 14 ஆண்டுகள் அந்த நிலத்தை எந்தவித வாடகையும செலுத்தாமல் பயன்படுத்தி வந்ததற்காக ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். அத்துடன் அந்த நிலத்துக்கான வரிகளை ஆக்கிரமித்தவர்கள் செலுத்தி இருந்தால், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அப்படி தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டிய வருவாய்துறையினர், முதலில் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் உண்மையான உரிமையாளரை கண்டுபிடித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதாவது இன்னார் உங்களின் நிலத்திற்கு பட்டா கேட்கிறார், கொடுக்கலாமா என்று நோட்டீஸ் அனுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்காமல், எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் உரிமையாளர் இருந்தால், ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு பட்டா வழங்கப்படும்.

அதேநேரம் உண்மையான உரிமையாளர் காணாமல் போய்விட்டார். எங்கு இருக்கிறார். எப்படி இருக்கிறார் என்று தெரியாத நிலையை ஆக்கிரமிப்பாளர் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதேநேரம் உண்மையான உரிமையாளருக்கு சட்ட ரீதியாக நிலத்தை காப்பாற்றிக்கொள்ள அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும். ஆனால் வாய்ப்புகளை தவறவிட்டால் ஆக்கிரமிப்பாளர் பட்டாவினை பெற்றுவிடுவார். நீதிமன்ற ஆணைகள் மூலமாகவும் ஒருவர் காணாமல் போய்விட்டார் என்பதை நிரூபித்து பட்டா பெற முடியும் என்பதால் நிச்சயம் வீட்டு மனை வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே உங்கள் நிலத்தை முறையாக பராமரித்து வாருங்கள். யாராவது ஆக்கிரமிக்கிறார்களா என்பதை அறிய மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் நிலத்தை போய் பார்கக வேண்டும். உங்கள் இடத்தை சுற்றி வேலிகளை கண்டிப்பாக போடுங்கள். உங்கள் பத்திரங்களின் நகலை யாரிடமும் கொடுக்காதீர்கள். அதை வைத்து போலி பத்திரங்களை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பெயரில் பத்திரம் இருந்து பட்டா இல்லை என்றால், உடனே பட்டா மாற்றம் செய்யுங்கள்.பட்டா மாற்றம் செய்யாவிட்டால் சிக்கல் ஆகிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+