ஆயிரத்தில் ஒருவரால் தான் முடியும்.. படத்தில் பூனை எங்கே இருக்கு? 5 செகண்டுக்குள் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் பூனை ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த பூனை எங்கே இருக்கிறது என்று உங்களால் 5 செகண்டுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? ஆயிரத்தில் ஒருவர் தான் சரியான விடையை குறிப்பிட்ட 5 செகண்டுக்குள் கண்டுபிடிதுள்ளனர். உங்களால் முடிகின்றதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும். அதில் உள்ள சவாலுக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, அது நம் பார்வைத் திறன் மற்றும் அறிவுத் திறனுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும். இதனாலேயே நெட்டிசன்கள் மத்தியில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சிலவகை ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வைத்து ஒருவரது கேரக்டரைக் கூட ஓரளவு கணித்து விடலாம் என்று சொல்கிறார்கள். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு இந்த இல்யூஷன் படங்கள் நல்ல பயனுள்ள பொழுது போக்காக உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொறுத்தவரை நேரடியாக விடைகள் நம் கண்களுக்கு தெரியாது. மேலோட்டமாக பார்த்தால் ஒருவித காட்சியும், அதையே உற்று பார்த்தால் வேறொரு காட்சியையும் காண்பிக்கும்.
படத்தில் எத்தனை காண்டாமிருகங்கள் உள்ளன? 99% பேர் தப்பா தான் சொல்லியிருக்காங்க.. உங்களால் முடியுமா
பார்க்கும் கோணங்களை மாற்றி பார்ப்பதனால், இந்த இல்யூஷன் படங்களில் விடையை கண்டுபிடிக்க முடியும். இன்று நாம் பார்க்க இருக்கும் இல்யூஷன் படத்தில் விடையை ஆயிரத்தில் ஒருவர் தான் கண்டுபிடித்து இருக்கிறார்களாம். 5 செகண்ட் டைமுக்குள் இதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா..
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை ஒன்று மறைந்துள்ளது. இந்த பூனையை தான் கண்டுபிடிக்க வேண்டும். மனிதர்களின் முகம் மட்டுமே படம் முழுக்க இருக்கிறதே தவிர இதில் பூனை எங்கே இருக்கிறது என்று யோசிக்க தோன்றுகிறதா.. ஆனால் இங்கே ஒரு பூனை இருக்கிறது. 5 செகண்ட் டைமுக்குள் பூனையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கியது.
ஆப்டிகல் இல்யூஷன்: படத்தில் “பூனை” எங்கே இருக்கு? 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்!
1..2 .. 3.. 4. 5. ஓக்கே டைம் ஓவர். கொடுக்கப்பட்ட 5 செகண்டுக்குள் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பெரிய பாராட்டுக்கள். நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் தான். அந்த பெருமை உங்களுக்கு சேரும். சுற்றி சுற்றி தேடிவிட்டோம் ஆனால் படத்தில் பூனை எங்குமே இல்லை என்று சொல்பவர்கள், கூடுதலாக இன்னும் ஒரு 10 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது தேடிப்பாருங்கள். விடையை கண்டுபிடித்துவிடலாம்.
அதாவது பூனை மனித முகத்திற்கு பதிலாக பூனை இருக்கும் என்று தேட வேண்டாம். இதேபோல் பூனையின் முழு உருவமும் இருக்கும் என்ற கோணத்திலும் தேட வேண்டாம். பூனையின் தலைப்பகுதி மட்டுமே இருக்கும். எனவே அந்த கோணத்தில் பாருங்கள். இப்போது 80 சதவிகிதம் பேர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்க கண்களுக்கு ஒரு சவால்! படத்தில் கற்றாழை எங்கே இருக்கு.. 8 செகண்ட் டைம்! கண்டுபிடிங்க பார்க்கலாம்
ஆனால் எப்படி தேடி பார்த்தாலும் பூனை எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என்று சொல்கின்றவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம். அதாவது படத்தின் இடதுபக்கம் அடிப்பகுதியில் மட்டும் பாருங்கள். இப்போது 90 சதவிகிதம் பேர்
கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்காதவர்களுக்கு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications