மாத சம்பளதாரர்களுக்கு பீதி.. "ரிட்டர்ன்" தாக்கல் பண்ணாத "இவங்களுக்கும்" ஆப்பு வெச்ச வருமான வரித்துறை
சென்னை: வருமான வரித்துறை மீண்டும் புது அதிரடியை தற்போது கொண்டுவந்துள்ளது. ரிட்டர்ன் தாக்கல் செய்யாதது குறித்த முக்கிய எச்சரிக்கையையும் பிறப்பித்திருக்கிறது.
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

பான் நம்பர்கள்: மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனாலும் சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள்.. அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு, அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.
இ-வெரிபிகேஷன்: அதேபோல, சமீபத்தில்தான், வரவு செலவு கணக்கை, "இ - வெரிபிகேஷன்" செய்யும், புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, புதிய சாப்ட்வேரையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது..
இதற்கு காரணம், மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறதாம். இதையெல்லாம் கண்டுபிடிக்கவே, இந்த புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால், மாத சம்பளதாரர்கள் போலி ரசீதை கொடுத்து தப்பிக்க வாய்ப்பிருக்காது என்று நம்பப்படுகிறது. ஆனாலும் சிலர் ரிட்டன் தாக்கல் செய்வதில்லை. அதனால்தான், இன்னொரு வார்னிங்கை வருமான வரித்துறை விடுத்துள்ளது..
காப்பீடு திட்டம்: அதாவது, வருமானவரி செலுத்துவதற்காக, காப்பீடு திட்டம், வங்கி வைப்பு தொகை, வீட்டு கடன் போன்றவற்றுக்கு, குறிப்பிட்ட அளவு வரி சலுகைகள் தரப்பட்டு வருவதைபோலவே, சேவை அடிப்படையில்செயல்படும் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தல அறக்கட்டளைகள் உள்ளிட்டவற்றுக்கும், வரி சலுகை அளிக்கப்படுகிறது..
ஆனால், அறக்கட்டளைகளாக செயல்படும் நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு உரிய கால அவகாசத்திற்குள், வருமான வரி ரிட்டர்ன் கணக்கை தாக்கல் செய்வதில்லையாம்..
ரத்தாகிவிடும்: இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்தநிலையில், இதற்கும் ஒரு கடிவாளத்ததை வருமானவரித்துறை போட்டிருக்கிறது. அதன்படி, "வருமான வரித்துறை அறிவிக்கும் அவகாசத்திற்குள், இனி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை இதில் தாமதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கணக்குதாரர்களின் வரிச்சலுகை ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications