தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து! ஓரவஞ்சனை! ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை: தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது ஓரவஞ்சனையான நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர் காரணமாகவே இந்த நடவடிக்கை என அவர் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த பதிவு வருமாறு;

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தைத் தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது ஓரவஞ்சனையானதுவன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கைரேகை வழியான வருகைப்பதிவேட்டுக் கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு படக்கருவிகள் சரியாகச் செயல்படாதது ஆகியவை தான் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இதுகுறித்த இந்திய மருத்துவஆணையத்தின் அறிக்கைக்குத் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம்அளித்தும் கூட, அங்கீகாரத்தை ரத்து செய்து, மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்அளவுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது தமிழ்நாட்டின் மீது அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்வை வெளிக்காட்டி இருப்பதாகத் தெரிகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும் திருச்சி கி ஆர் பி விசுவநாதன் மருத்துவக்கல்லூரியின் மருத்துவத் துறையில் மிகவும் பழமை வாய்ந்தது மட்டுமல்ல பல்வேறுமெச்சத்தகுந்த சாதனைகளையும் படைத்த நிறுவனங்களாகும்.நாடாளுமன்றத் தேர்தல்அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில் அரசியல் ஆதாயத்திற்காகத் தமிழ்நாட்டில் உள்ளமருத்துவ கட்டமைப்புகளைக் குறை சொல்வது போன்ற செயல்களில் ஒன்றிய அரசுமறைமுகமாக ஈடுபடுகிறது என்கிற எண்ணம் தோன்றுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது இந்த கல்லூரியில்நிரப்பப்பட வேண்டிய 500 இடங்களில் சேரும் மாணவர்களின் எதிர்காலத்தைக்கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் இந்த விடயத்தைஅணுகி மாணவர்களின் நலனைக் காப்பதில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications