நான் உங்கள் வீட்டு பிள்ளை.. சூடு பிடித்த தேர்தல் களம்.. காலில் விழுந்து ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு சேகரிக்க களம் இறங்கிய வேட்பாளர்கள் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உங்கள் வேட்பாளர் என்ற வழக்கமான வாசகங்களோடும், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் பிரச்சாரங்களோடும், ட்ரேட் மார்க் தேர்தல் யுக்தியான வாக்களர்களின் காலில் விழுந்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பின்பு மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
சென்னைம், கோவை, மதுடை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் , 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்குத்தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளில் 1374 வார்டு உறுப்பினர்களுக்கும், 138 நகராட்சிகளில் உள்ள 3843 வார்டு உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் 7621 வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 12,838 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிந்ததும் தலைவர், துணைத்தலைவர், மேயர் ,துணை மேயர் , உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

ஒரு லட்சம் வேட்பாளர்கள்
மேலும் 42 மேயர் - துணை மேயர் பதவிகளுக்கும், 276 நகராட்சி தலைவர் - துணை தலைவர் பதவிகளுக்கும், 980 பேரூராட்சி தலைவர் - துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் மக்களால் தேர்தெடுப்பட்ட 12,838 வார்டு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்தெடுக்கவுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர், மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் என ஒரு லட்சத்திற்கும் மேலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தீவிர வாக்கு சேகரிப்பு
தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக - திமுக கூட்டணி கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் காலில் விழுந்து தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டனர். கரூரில் திமுக சார்பில் 41 வேட்பாளர்களும், அதிமுக சார்பில் 46 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர், தாந்தோணிமலை, செல்லாண்டி பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கினர்.

தேர்தலுக்கு தயார்
46வது வார்டு வேட்பாளர் தாரணி சரவணன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வரும்போது, திமுகவினர் பட்டாசு வெடித்து மாலையணிவித்து வரவேற்பளித்தனர். இதேபோல் 45வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் 42வது வார்டு உறுப்பினர் கார்த்திக்குமார் ஆகியோர் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து காலில் விழுந்து வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளருக்கு பெண்கள் நெற்றியில் திருநீறு வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், 48வது வார்டு வேட்பாளர் வேலுச்சாமி வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து நகைச்சுவையுடன் பேசி வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
-
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications