Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழகத்தில் கஞ்சாவே இல்லை என வெட்கமே இன்றி சொல்கிறார் அமைச்சர்” - எடப்பாடி கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "'தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை' என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா? போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?" எனக் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் கடந்த 27 ஆம் தேதி வடமாநில இளைஞர் சூரஜ் (34) என்பவரை, கஞ்சா போதையில் 17 வயது கொண்ட 4 சிறுவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

edappadi palaniswami tiruvallur tiruttani

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதே திருத்தணி ரயில் நிலையத்தில் பட்டுப்புடவை வியாபாரி ஒருவரை, 2 இளைஞர்கள் சரிமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அந்த நபர் மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூரில் தலைமை காவலர் ராமகிருஷ்ணன் என்பவரை இளைஞர் ஒருவர் நேற்று இரவு கத்தியுடன் விரட்டியுள்ளார். இதில் அச்சமடைந்த அந்த காவலர், பெல்ட்டை வீசியபடியே அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதன் பின்னர், அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி ரயில் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்தடுத்து தாக்குதல் நடந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவங்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.

போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?

'தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை' என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா? கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, ராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா என்ன?

போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும். 2026 விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள், வடமாநில இளைஞரை கத்தியால் சராமாரியாக வெட்டிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்திருந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "போதைப் பொருட்களுக்கு எதிராக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எதிர்க்கட்சியினர் அனைவரும் அறிவார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்தது" எனக் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+