நீட் தேர்வை ஒழிக்க முடியாது.. மாணவர்களை குழப்பாதீங்க.. உதயநிதியை விமர்சித்த பிரேமலதா
சென்னை: 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை நிச்சயம் ஒழிக்க முடியாது. நீட் முதலில் வரும் போது வேண்டாம் என்றுதான் நாங்களும் சொன்னோம். ஆனால், இந்தியா முழுவதும் நீட் தேர்வு உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்றும் குப்புறம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, நீட்டை ஒழிப்போம் என்று சொன்னதற்காக உதயநிதி ஸ்டாலின் அதையே பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டு இருக்கிறார் என சாடினார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

ஒரு கையெழுத்தில் அது நிறைவேறவில்லை. இப்போது 50 லட்சம் கையெழுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார். அதுவும் நிறைவேற போவது இல்லை. 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட்டை நிச்சயம் ஒழிக்க முடியாது. நீட் முதலில் வரும் போது வேண்டாம் என்றுதான் நாங்களும் சொன்னோம். ஆனால், இந்தியா முழுவதும் நீட் தேர்வு உள்ளது. நீட் வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். மாணவர்களை தயவு செய்து குழப்பாதீர்கள்.
நீட் தேர்வை நிச்சயம் ஒழிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. அப்புறம் எதுக்காக மாணவர்களை குழப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை குழப்பி அவர்களை திசை திருப்பும் செயல்பாடு இது. மாணவர்கள் யாரும் இவர்கள் கேட்பதை தயாராக இல்லை. இவ்வளவு நாள் இருந்தார்கள்... ஒரு வேளை நீட் தேர்வு இல்லாமல் போய்விடும். நாம ஏன் படிக்க வேண்டும் என்று..
ஆனால் இப்போது மாணவர்கள் தெளிவாகிவிட்டார்கள். நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து நிச்சயம் விலக்கு அளிக்க முடியாது, நாம படிக்க ஆரம்பித்து விடுவோம் என்று படிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் படிப்பறிவு குறைவாக உள்ள பீகார் மாநிலத்திலேயே நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தமிழ்நாடு மாணவர்கள்தான் இந்தியாவிலேயே அறிவாளியான மாணவர்கள்.
ஏன் அவர்களை நீங்கள் திசை திருப்பி குழப்புகிறீர்கள். ஒரு அரசாங்கம் என்றால் அவர்களை தெளிவாக வழிநடத்துங்க... நீட் தேர்வு எடுக்க முடியாது.. நீங்கள் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு போங்க.. ஏதோ குப்புறம் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக. நீட்டை ஒழிப்போம் என்று சொன்னதற்காக உதயநிதி ஸ்டாலின் அதையே பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டு இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு எழுதட்டும் எழுதாமல் போகட்டும். ஆனால் மாணவர்களை குழப்ப வேண்டாம். எல்லா மாணவர்களும் தேர்வு எழுத தயாராகிவிட்டார்கள். இன்னும் ஒரு வருடம் இரண்டு வருடத்தில் பாருங்கள். இந்தியாவிலேயெ அதிக மதிப்பெண் ஜெயிக்க போவது தமிழ்நாட்டு மாணவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே சரியாக அவர்களை வழி நடத்த வெண்டும் என்று கேட்கிறேன்" என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications