இஸ்லாமியர்களிடம் பணிந்தார் பிரதமர்.. சரணடைந்த மோடி.. பாஜக "கட்டத்தை" நொறுக்கி.. சொல்றது யார் பாருங்க
சென்னை: பாஜக ஹாட்ரிக் வெற்றியை எட்டிப்பிடிக்கும் என்று தலைவர்கள் நம்பிக்கையுடன் சொல்லிவரும்நிலையில், காங்கிரஸ் அந்த நம்பிக்கைக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக விமர்சித்து கொண்டிருக்கிறது.
இந்த முறை தேர்தலில், எப்படியும 400 சீட்களை வென்றுவிட வேண்டும் என்பதிலும், ஹாட்ரிக் வெற்றியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதிலும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதற்காகவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பாகவே, ஏகப்பட்ட தேர்தல் வியூகங்களையும் வகுத்து, அதன்படியே களமிறங்கியிருக்கிறது.

முடிவுகள்: லோக்சபா தேர்தல் முடிவுகளில், இந்த அளவுக்கு பாஜக நம்பிக்கை வைத்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறது.. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தினம் தினம் பாஜகவை விமர்சித்து பேசியும், அறிக்கை வெளியிட்டும் வருகிறார்.
நேற்றுகூட ஒரு கருத்து சொல்லியிருந்தார்.. 4ம் கட்டதேர்தலில், இதுவரை 379 தொகுதிகளில் 79 தொகுதிகளில் கூட பாஜக வெல்ல முடியவில்லை என்று ரிப்போர்ட் உளவுத்துறை மூலம் பாஜகவிற்கு போயிருக்கிறது.. அதனால்தான், மோடி, அமித் ஷா என பாஜக தலைவர்கள் கோபமாகி உள்ளார்கள்..
மதக்கலவரம்: எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் செய்து, தேர்தலில் பிரச்சனையை உண்டுபண்ணலாம், தோல்வி பயத்தில் மதக்கலவரம் செய்யலாம் என்றெல்லாம் பாஜக நினைக்கிறது.. ஆனால், காங்கிரஸ் இதை லேசில் விடாது. வில்லங்கம் ஏற்படுத்த நினைக்கும் பாஜகவை, மக்களும் கவனிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதோ இப்போது மீண்டும் பாஜகவை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகை பேசும்போது, "100 இடங்கள் கூட கிடைக்காது என்று பாஜவுக்கு தகவல் கிடைத்ததுமே, இப்போது இஸ்லாமியர்களை பற்றி புகழ்ந்து பேசி, அவர்களிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதாவது, மோடி சரணடைந்திருக்கிறார். இதைத் தான் ராகுல் காந்தி வெறுப்பு அரசியல் என்கிறார். ஆர்எஸ்எஸ் மனித நேயத்துக்கு எதிரானது, அது அகற்றப்பட வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்.
பாஜக: பாஜக வெறுப்பு அரசியலுக்கான கட்சியாகும்.. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், மனித நேயத்திற்கு எதிரானது என்பதால், இதை உடனடியாக அகற்ற வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் பாஜகவின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
முதல்கட்ட தேர்தலில், மோடி எருமை மாடு அரசியல் பேசினார்... 2ம் கட்டத்தில் பாகிஸ்தான் அரசியல் பேசினார்... 3ம்கட்ட தேர்தலில் பிரிவினை வாதத்தை பற்றி பேசினார்... காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒருவர் சொத்தை இன்னொருவருக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறினார். இப்போது 4ம்கட்ட தேர்தல் முடிந்த பிறகு, இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறுகிறார். நிலைமையை தெரிந்துகொண்டு 4-ம் கட்ட தேர்தலின்போது மன்னிப்பு கேட்கும் விதமாக பேசி வருகின்றனர்.
பிரதமர் மோடி: ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் ஒவ்வொரு வித அரசியல் பேசிய பிரதமர் மோடி இப்போது, "இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை" என்கிறார்.. மோடி மற்றும் பாஜகவின் உண்மை முகம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாக்குகளுக்காக மோடி குட்டிக்கரணம் அடிக்கிறார். தேசத்துக்கான தேர்தலாக அல்லாமல் மதத்துக்கான தேர்தலாக அவர்கள் இந்த தேர்தலை பார்த்தார்கள்.. இப்போது, பாஜவின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது.
மோடியின் தோல்வி தற்போது உறுதியாகியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய அவர்களின் சித்தாந்தம் மாறி இன்று உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். இதை இசுலாமியர்கள் யாரும் நம்பக் கூடாது.
சமூகநீதி: சமூக நீதியை சூறையாடும், அழிக்கும் கட்சியான பாஜக-வுடன் பாமக நிறுவனர் ஏன் கூட்டணி வைத்தார்? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு என்று அதிமுகவினர் வன்னியர் சமூக்கத்தை ஏமாற்றினர். பாமக தூக்கிப்பிடிக்க வேண்டிய இயக்கம் காங்கிரஸ்தான்.. தூக்கிப்பிடிக்க வேண்டிய தலைவர் ராகுல் காந்திதான்.. சாதிவாரி கணக்கெடுப்பை புறம்தள்ளிய கட்சியான பாஜகவுடன் கைகோர்த்திருப்பது நியாயமா? இமாலய தவறு செய்துள்ள டாக்டர் ராமதாஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்றார் செல்வப்பெருந்தகை.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications