கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி? என கேட்க கூட முடியவில்லை.. திமுக பவள விழாவில் ஸ்டாலின் அட்டாக்!
சென்னை: திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி? என கேட்க கூட முடியாத நிலை உள்ளது என்று மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்து பேசினார். மேலும் தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன் என்று ஸ்டாலின் பேசினார்.
சென்னை ஒஎம்சிஏ மைதானத்தில் இன்று திமுக முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:- கழகம் நல்ல கழகம் என்ற பாடலுடன் முதல்வர் ஸ்டாலின் உரையை தொடங்கினார். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன்.

பவள விழா, முப்பெரும் விழா எழுச்சிமிகு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. திமுகவின் பவள விழா எனது தலைமையில் கொண்டாடப்படுவது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள். அமெரிக்க பயணத்திற்கு சென்றோம் என்றதைவிட வென்றோம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளுடன் பல வேலைவாய்ப்புகளை பெற்று வந்துள்ளேன்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம். பணிக்கு செல்லக்கூடிய மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு தனி மனிதரையும் சார்ந்திருக்கிற அரசாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது. இத்தனை திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா?.. இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து வளம் மிக்க மாநிலமாக மேம்படுத்தி வருகிறது. பலப்படுத்தி வருகிறது.
நம்முடைய எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்று கேட்டால் இல்லை. மாநில உரிமைகள் நிறைவேறிட ஒரு ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் கூட தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக முன்னேற்றியிருக்கிறோம். இன்னும் சரியான நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மேலும் முன்னோடி மாநிலமாக மாற்ற முடியும்.
கலைஞர் எளிமையாக சொன்னார், நம்ம கோட்டையில் இருந்தாலும் அங்கு இருக்ககூடிய புல்லை வெட்ட வேண்டும் என்றால் கூட நமக்கு உரிமை இல்லை. மேலே அனுமதி வாங்க வேண்டும். இன்றைக்கு கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி? என்று கேட்க கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கு.
குறைவான நிதி கிடைக்கும் போதே இவ்வளவு செய்ய முடியும் என்கிற போது முழுமையாக கிடைத்தால் மேலும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற முடியும். வரும் 2026 தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஆணவத்தில் சொல்லவில்லை. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications