சென்னையில் தாறுமாறாக வந்த கார்.. கண் இமைக்கும் நேரத்தில் கொடூரம்.. டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று பட்டப்பகலில் தாறுமாறாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய நபர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று L Board கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் அதிவேகமாக வந்து சாலையோரம் நடந்து வந்த பாதசாரியை அடித்துத் தூக்கி வீசியது.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் மோதி சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றது. பட்டப்பகலில் சென்னையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சாலையில் நடந்து சென்ற பழனி என்ற நபர், தன்னை நோக்கி கார் வருவதை பார்த்து சுதாரிப்பதற்குள், அதே நொடியில் காரில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்றதாக விபத்தை ஏற்படுத்திய ஜெயக்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications