இந்தியாவில் கார்களின் விலை அடியோடு குறைய போகுது.. இஸ்ரோ சூப்பர் முடிவு.. தமிழ்நாட்டிற்கு ஜாக்பாட்
சென்னை: கார்களின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைய போகிறது.. இஸ்ரோ உருவாக்க போகும் ஒரு தொழில் நுட்பம் காரணமாக கார்களின் விலையில் பெரிய மாற்றம் வரும் என்கிறார்கள். கார்களின் சென்சார் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. செலவை குறைக்கும் விதமாக உள்நாட்டிலேயே கார் சென்சார்களை உற்பத்தி செய்ய இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இந்த தகவலை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.
இந்தியாவில் கார்களின் புதிய புதிய தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் அறிமுகம் ஆகி வருகின்றன. மெக்கானிக்கல் என்ஜினியரிங்குடன் தொடர்புடையதாக இருந்த கார்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பங்கள் வந்தன. அடுத்ததாக ரோபோடிக் தொழில்நுட்பமும் வரத்தொடங்கி உள்ளன. கார்களில் வெறும் என்ஜின், டயர், ஸ்டியரிங், சீட் உள்ளிட்டவை இருப்பது வழக்கம். இவற்றை மேனுவலாக டிரைவர் தான் பயன்படுத்தி வந்தார்.

அதன்பிறகு மெல்ல மெல்ல சென்சார்கள் வந்தன. இப்போது இருக்கை, கண்ணாடி, என்ஜின், பிரேக், பின்னால் உள்ள டிக்கி வரை எல்லாமே சென்சாருடன் தொடர்பில் வந்துவிட்டது. அதன்படி தற்போது வரும் கார்கள் எல்லாமே சென்சார் உதவியுடன் செயல்படும் கார்களாகவே உள்ளது.
இதில் என்ன தான் கார்களை நாம் தயாரித்தாலும், இதற்கான சென்சார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே சொகுசு கார்கள் தொடங்கி சாதாரண கார்கள் வரை பல்வேறு கார்களின் விலை சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
இப்போது வரும் கார்களில், மொத்தம் ஐந்து சென்சார்கள் முக்கியமானவை ஆகும். அதன் விவரம் வருமாறு: என்ஜினுக்கு ஏற்படும் அழுத்தத்தை கண்காணிக்கும் 'பன்மடங்கு முழுமையான அழுத்தம் தரும் சென்சார்' , என்ஜினை குளிர்வித்து சூட்டை கண்காணிக்கும் 'வெப்பநிலை சென்சார்', ஆக்சிஜன் சரியாக கிடைக்காமல் பழுதாகும் கார் என்ஜின்களை சரி செய்ய உதவும் 'ஆக்சிஜன் சென்சார்', கார்களின் என்ஜினுக்கு தேவைப்படும் காற்றை நிர்ணயிக்கும் 'காற்று ஓட்டம் சென்சார்', காரின் வேகம் மற்றும் எரிபொருளை கட்டுப்படுத்தும் 'என்ஜின் ஸ்பீடு சென்சார்', இந்த 5 சென்சார்கள் காரில் உள்ள முதுகெலும்பாக உள்ளன.
இந்த சென்சார்களை இந்தியாவிலேயே தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் இதுபற்றி கூறுகையில் , "நாட்டில் ராக்கெட், விண்கலன்களுக்கு தேவையான சென்சார்கள் தயாரிப்பது என்பது மிகவும் கடினமானவையாக இருக்கிறது. இவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தயாரித்து சாதனை படைத்து வருகிறார்கள்
ஆனால் கார்களுக்கு தேவையான சென்சார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை இருக்கிறது. இந்தியாவில் ஓடும் பெரும்பாலான கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுவது தொடர்கிறது. ராக்கெட், விண்கலன்களுக்கு தேவையான சென்சார்களையே இஸ்ரோ தயாரித்து வரும் நிலையில், கார்களுக்கு தேவையான சென்சார்களை மேலும் குறைந்த விலையில் உற்பத்தி செய்து கார் உற்பத்தி துறைகளுக்கு சேவை செய்ய இஸ்ரோவால் நிச்சயம் முடியும்.
கார் சென்சார்களை இந்தியாவிலேயே குறைந்த விலையில் உற்பத்தி செய்வது தொடர்பாக கார் உற்பத்தி நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக நாங்கள் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் எவ்வாறு பெறப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வெளியில் இருந்து பெறப்படும் பல கூறுகளை இந்தியாவில் செய்து, உலகளாவிய பயனர்களுக்கான சில உதிரிபாகங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவராக மாற்றுவதில் கணிசமாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதில் தொழில்நுட்பங்களின் பரிமாற்றமும் நிச்சயம் அவசியம் ஆகும்"இவ்வாறு கூறினார்
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரி இதுபற்றி கூறும்போது, 'இந்தியாவில் சென்சார்களை உருவாக்கும் யோசனை, பல எலட்டிரான் வோல்ட்டு மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ள மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். தற்போதைய நிலையில் கார்களின் விலை அதிகம் என்பது தான் வாடிக்கையாளர்களின் கவலையாக உள்ளது. எனவே புதிய தொழில்நுட்ப சென்சார்கள், மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விலையை குறைக்க உதவும். மேலும் புதிதாக தொழில்களை தொடங்கும் நிறுவனங்களுக்கும் பெரிதும் உதவியாக அமையும். பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் இந்த யோசனையில் ஆர்வமாக இருக்கிறார்கள்" என்றார்.
இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறையில் கொடிகட்டி பறக்கும் மாநிலம் என்றால் சந்தேகமே வேண்டாம்.. அது தமிழ்நாடு தான். அதிலும் குறிப்பாக சொல்வது என்றால் சென்னை.. சென்னை தான் ஆட்டோ மொபைல் தொழிலில் இந்தியாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. எனவே கார்களுக்கு தேவையான சென்சார்களை இஸ்ரோ உள்நாட்டில் தயாரிக்கும் நிலை உருவானால், அது தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஆட்டோ மொபைலில் முன்னணியில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பை தரும். கார்களின் விலையும் குறையும் என்பதுடன், வேலைவாய்ப்பும் பெரிய அளவில் அதிகரிக்கும். இதன் காரணமாக கார் சென்சார் தயாரிப்பு குறித்து பல நிறுவனங்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications