பெரியாரை பின்பற்றுபவருக்கு விருதா.. டி.எம் கிருஷ்ணா சங்கீத கலாநிதி விருது! ரஞ்சனி காயத்ரி எதிர்ப்பு!
சென்னை; கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக இசை ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்பதை மாற்றி அதை ஜனநாயகப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறார் கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா. பெசன்ட் நகரில் மீனவர்கள் குடியிருப்பில் இசை நிகழ்ச்சி நடத்துவது, மீனவர்களையும் சேர்த்துக்கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துவது என்று கர்நாடக இசையை மக்களிடம் கொண்டு செல்வதற்கான தீவிரமான பணிகளை கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா மேற்கொண்டு வருகிறார்.

"பாரம்பரிய" கர்நாடக இசை கலைஞர்கள் பலர் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அது எப்படி அது எப்படி "அங்கே" எல்லாம் இசை கச்சேரி நடத்தலாம் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர் இசையை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறு இல்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அந்த இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை. இந்த நிகழ்வை புறக்கணிக்கிறோம்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 ஆம் ஆண்டு மியூசிக் அகாடமியின் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்தும், டிசம்பர் 25 அன்று எங்கள் கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுவதாக நாங்கள் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.
டி.எம்.கிருஷ்ணா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
டி எம் கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். வேண்டுமென்றே மகிழ்ச்சியுடன் உள்ள சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார்.
அவரது செயல்கள் ஒரு கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதில் அவமான உணர்வைப் பரப்ப முயன்றது மற்றும் இசையில் ஆன்மீகத்தை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தார். அவர் மில்லியன் கணக்கான கர்நாடக இசை கலைஞர்களை கொச்சைப்படுத்தி உள்ளார். கலைத்திறன், கடின உழைப்பு மற்றும் கர்நாடக இசையை அவமதித்து உள்ளார்.
இசையை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறு இல்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது
.
விமர்சனம்: கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி காயத்ரியின் இந்த முடிவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு எதிராக, அவரின் அரசியலை காரணம் காட்டி இப்படி கருத்து தெரிவிப்பது தவறானது என்று விமர்சனங்களை வைத்துள்ளனர்.
மியூசிக் அகாடமி தலைவர் முரளி, இது விளம்பரத்திற்காக செய்யப்பட்ட எதிர்ப்பு, ரஞ்சனி காயத்ரி இந்த விருதை அவமானப்படுத்த வேண்டும் என்று, தேவையில்லாத பிரச்னையை உருவாக்க வேண்டும் என்று இந்த முடிவை ரஞ்சனி காயத்ரி எடுத்துள்ளனர், என்று ரஞ்சனி காயத்ரி மீது கடுமையான பதில் விமர்சனங்களை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications