டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான போலி பாஸ்போர்ட் வழக்கு.. ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை!
சென்னை: போலி பாஸ்போர்ட் தொடர்பாக ஐ.பி.எஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை டேவிட்சன் தேவாசீர்வாதம் மனைவி நடத்தும் டிராவல் ஏஜன்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது சம்பந்தமான விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்கும்படி, எஸ்.பி, சி.ஐ.டி, ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் தமிழ்நாடு அரசுக்கு கடந்த மே மாதம் மனு அனுப்பியிருந்தார். மேலும் இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 6ஆம் தேதி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு நற்சான்று வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து, சம்பவம் மதுரையில் நடந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது எனவும், மேலும் மதுரைக் கிளை ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நற்சான்று அளித்துள்ளது குறித்து மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை வரம்புக்கு உட்பட்ட வழக்குகளை சென்னையிலும் தாக்கல் செய்ய அனுமதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜேந்திரன் சுட்டிக்காட்டிய போது, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். அதன்படி, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications