Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி + ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவிக்காலத்தில் ₹397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் நடந்தாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அமர்வு, லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை மற்றும் டெண்டர் குழு கூட்ட குறிப்புகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவிக்காலத்தில் ஆயிரக்கணக்கான டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஒப்பந்தங்களில் நடந்த கூட்டு ஏலத்தின் காரணமாக மின்வாரியத்திற்கு ₹397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. 2024-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் இது தொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்தது

Case against Senthil Balaji IAS officer Madras High Court major order for dvac

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி. சுரேஷ் நீதிமன்றத்தில் வாதிடுகையில். 25 KVA முதல் 500 KVA வரையிலான மின்மாற்றிகளை ஆன்லைன் ஏலம் மூலம் கொள்முதல் செய்கிறது. 2021-23 காலகட்டத்தில் விடப்பட்ட 10 டெண்டர்களை (மொத்த மதிப்பு ₹1,182.88 கோடி) அறப்போர் இயக்கம் ஆய்வு செய்தது. இதில் 7 டெண்டர்களில் ஒப்பந்ததாரர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டு (Cartelisation) விலையை நிர்ணயம் செய்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இதன் மூலம் ₹397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு டெண்டரிலும் 26-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அனைத்து ஏலதாரர்களும் ஒரே மாதிரியான விலையை, அதாவது புள்ளிக்கு அடுத்து வரும் எண்கள் கூட மாறாமல் அப்படியே குறிப்பிட்டிருந்தார்கள். இது தற்செயலாக நடக்க வாய்ப்பே இல்லை; இது ஒரு திட்டமிட்ட சதி என்று கூறியிருந்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறைப்படிதான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஒப்பந்ததாரா்கள் ஒரே விலையைத்தான் குறிப்பிடுகின்றனா். இதனால் அரசும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் மின்மாற்றிகளை மாற்ற முடியாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "₹1,182.88 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் இத்தகைய கூட்டு ஏலத்தை அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அப்போதைய டேன்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் நிதி கட்டுப்பாட்டாளர் வி. காசி ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாக அறப்போர் இயக்கம் தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற முறைகேடு குறித்த வழக்குகளில் ஆரம்பகட்ட விசாரணை என்பது தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டிருந்தால், இந்த வழக்கு விசாரணைக்கே வந்திருக்காது. அனைத்து வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தினால், எந்தவொரு முடிவையும் எட்ட முடியாது என்று கருத்து தெரிவித்தனர்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் நேற்று விசாரணையின் போது பிறப்பித்த உத்தரவில், அந்த ஒப்பந்தங்களை அங்கீகரித்த டெண்டர் குழு கூட்டங்களின் குறிப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி வரும் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மார்ச் 9, 2026 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+