உயிரிழந்தவரின் பெயரில் மோசடி.. சென்னை துணை மேயர் உள்பட 6 பேர் மீது பாய்ந்த வழக்கு
சென்னை: சென்னையில் உயிரிழந்தவரின் பெயரில இருந்த பங்கை, உயிருடன் இருப்பதுபோல் சித்தரித்து மோசடியாக செய்து பறிக்க முயன்றதாக, சென்னை துணை மேயர் மகேஷ் உள்பட 6 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கு தாம்பரம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி இசக்கியம்மாள். மோகன் சைதாப்பேட்டையில் உள்ள மார்ஸ் மைன்ஸ் என்ற நிறுவனத்தை , சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன், திவாகரன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வந்தார்
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மோகன் இறந்து போனார். மோகன் இறந்துபோனாதால் அவரது பங்கை மனைவி இசக்கியம்மாள், பங்குதார்களான சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன், திவாகரன் ஆகியோரிடம் கேட்டு முறையிட்டாராம். ஆனால், மோகனுக்கு உரிய பங்கை அவரது மனைவியிடம் தராமல் அலைக்கழித்து வந்தார்களாம்.
இந்நிலையில் ஒருநாள், தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து இசக்கியம்மாளுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், இறந்த மோகன் உயிருடன் இருப்பதுபோலவும், போலியாக சித்தரித்து கையெழுத்திட்டு பங்கை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் இசக்கியம்மாளுக்கு தெரியவந்ததாம்.
இது தொடர்பாக இசக்கியம்மாள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, தென்சென்னை மாவட்ட பதிவாளர் சத்யபிரியாவிடம் விசாரித்தாராம்.
அப்போது துணை மேயர் மகேஷ் உள்பட ஐந்து பேர் போலியான ஆவணங்களை சித்தரித்து அவரது பங்கை மோசடி செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்ததாம்.
இதனையடுத்து இந்த மோசடி சம்பவம் தொடர்பாக, இசக்கியம்மாள் மாநகராட்சி துணை மேயர் மகேஷ், குணசேகரன், பதிவாளர் சத்யபிரியா உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2021ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இசக்கியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மோசடி, போலியான ஆவணத்தை புனைதல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி துணை மேயர்மற்றும் அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் உள்ளிட்டோர் இணைந்து போலியான ஆவணங்களுடன் மோசடி செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை துணை மேயர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications