தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு.. தொண்டர் அளித்த புகாரில் நடவடிக்கை! பவுன்சர்களால் வந்த வினை
சென்னை: மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசிய பவுன்சர் மீது, பாதிக்கப்பட்ட தவெக தொண்டர் தனது தாயுடன் சென்று போலீசில் புகார் அளித்த நிலையில், தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். தவெக மதுரை மாநாட்டில், சுமார் 2500 ஆண் பவுன்சர்கள், 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

தூக்கி வீசிய பவுன்சர்கள்
இந்த மாநாட்டில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வால்க் மேற்கொண்டார். அப்போது விஜய்யை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ரேம்ப் வாக் மேடையில் ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவி இருந்தனர். ஆனாலும் அதனையும் மீறி விஜய் ரேம்ப் வாக் சென்றபோது அவரது ரசிகர்கள், பவுன்சர்களையும் தாண்டி மேடையில் ஏறி விஜய் அருகே நெருங்கி வந்தனர்.
அவர்களை தடுத்த பவுன்சர்கள் குண்டுக்கட்டாக அவர்களை மேடையில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது ஒரு ரசிகர் கீழிருந்து ராம்ப் வாக் மேடையில் ஏறியபோது பவுன்சர் ஒருவர் அவரை அலேக்காக தூக்கி தரையில் எறிந்தார். இதில் காலில் முறிவு ஏற்பட்டு அந்த தொண்டர் துடிதுடித்துப் போனார். அதேபோல, இன்னொரு தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய நிலையில், அவர் பக்கவாட்டில் இருந்த கம்பியை பிடித்து தொங்கி பின்னர் கீழே இறங்கினார்.
இளைஞரின் தாய் ஆவேசம்
இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரல் ஆனது. இதனை வீடியோவாகப் பார்த்த அந்த இளைஞர்களின் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் மீது பவுன்சர்கள் நடத்திய தாக்குதலால் நொந்து போயுள்ளனர். குண்டுக்கட்டாக தூக்கி எறியப்பட்ட இளைஞரில் ஒருவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த சரத்குமார். சரத்குமாரின் தாயார் சந்தோஷம், தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை பற்றி ஆதங்கத்துடன் பேசி இருந்தார்.
என் மகன் கை, கால் உடைந்து இருந்தால், உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது? என் மகனை எனக்கு யார் திருப்பித் தருவது? என் குடும்பம் வசதி வாய்ப்பில்லாத குடும்பம். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என் பிள்ளையை வளர்த்தேன்னு எனக்குத்தான் தெரியும். ஒரு உயிரோட வேல்யூ என்னவென்று விஜய்க்கு தெரியுமா? என ஆவேசமாகக் கூறி இருந்தார்.
போலீசில் புகார்
இந்நிலையில், அந்த இளைஞர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மூங்கில்பாடியை அடுத்த பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமார் (26) என்பது தெரியவந்தது. அவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு தனது தாயுடன் வந்து, தவெக தலைவர் விஜய், அவரது பாதுகாவலர்கள் மீது புகார் மனு அளித்தார்.
அவர் அளித்துள்ள புகாரில், "மதுரை தவெக மாநாட்டில் நடிகர் விஜய் நடந்து வந்த பாதை அருகே நின்றுகொண்டிருந்த நான், அவரை பார்த்த மகிழ்ச்சியில் நடைபாதையில் ஏறினேன். அப்போது, விஜய்யின் பாதுகாவலர்கள் என்னை நடைபாதை மேடையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர். இதில், எனது மார்பு, தோள்பட்டை, விலா எலும்பில் படுகாயம் ஏற்பட்டது.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாநாட்டில் நடந்த சம்பவத்தை வெளியே கூறவிடாமல் தடுத்தார்களே தவிர, உடல் நலம் குறித்து விசாரிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது போலீஸார் கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு
இந்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஜய், அவரின் 10 பவுன்சர்கள் மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்ற வழக்கு எண்; 346/2025 கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) நடிகர் விஜய், மற்றும் பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்த மதுரை தவெக மாநாடானது, கூடக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. எனவே, தற்போது பெரம்பலூர் குன்னம் காவல் நிலையத்தில் இருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications