அனுமதியே கேக்கல.. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேரணி.. தேமுதிகவினர் மீது பாய்ந்தது வழக்கு!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வரை காவல்துறையின் அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதாக தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விஜயகாந்த்துக்கான பத்ம பூஷன் விருதுடன் நேற்று சென்னை வந்தடைந்தார் பிரேமலதா விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கூடி, பத்ம பூஷன் விருதுடன் வந்த பிரேமலதாவை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டார் பிரேமலதா விஜயகாந்த். திறந்தவெளி வாகனத்தில் பிரேமலதா, பத்மபூஷன் விருதைக் காட்டியபடி புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேமுதிகவினர் தங்கள் வாகனங்கள் பேரணியாகச் செல்ல புறப்பட்டனர்.
அனுமதியின்றி சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரேமலதாவுடன் பேரணியாக செல்ல முயன்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர். ஒன்றிரண்டு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால் தேமுதிக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேமுதிகவினரின் வாகனங்கள் வரிசையாக நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரேமலதாவின் வாகனத்துடன் தேமுதிகவினர் ஏராளமானோர் வாகனங்களில் கோயம்பேடு நோக்கிச் சென்றனர். பிரேமலதா விஜயகாந்த், பத்ம பூஷன் விருதுடன், தேமுதிக தொண்டர்கள் புடைசூழ கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வரை காவல்துறையின் அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதாக தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் பெருமளவு கூட்டத்தை கூட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications