லஞ்சம் வாங்கி மாட்டினாரே அங்கித் திவாரி.. அமலாக்கத்துறையும் விசாரிக்கனுமாம்! இன்று வழக்கு விசாரணை
சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சுரேஷ் பாபுவை மிரட்டி 2 தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி போலீசாரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டாா். ஊழல், லஞ்சம், முறைகேடுகளை தடுக்க வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் வாங்கி கைதான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரிடம் தமிழ்நாடு மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் அவர் ஆஜா்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவல் 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், இதற்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னா, "உரிய ஆதாரங்களுடன் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கித் திவாரியிடம் விசாரணை செய்தால் மட்டுமே மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இருக்கும் தொடர்பு தெரிய வரும். அவரது லேப்டாப்பில் இருந்து முக்கிய ஆவணம் கிடைத்து உள்ளது. 75 பேரை அவர் இதுவரை பட்டியலிட்டு உள்ளார். மேலும் 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படவில்லை. அங்கித் திவாரிக்கு ஜாமீன் அளித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர்." என்றார்.
அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாளையுடன் அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்க கோரி அமலாக்கத் துறை, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடா்ந்து, இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மோகனா, மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்தாா்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications