சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின்சார வாரியத்தின் ஊரடங்கு கட்டண நடைமுறையால் மக்களுக்கு அதிக செலவு.. ஹைகோர்ட்டில் வழக்கு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோகத்திற்கான இணைப்புக்கான மின்சார அளவு கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Case in Chennai High Court demanding the cancellation of the order issued by Electricity Board

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், முன்பு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் யூனிட் அளவில் கணக்கிடாமல், முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம், 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மீறிய செயல் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா பரவியது எப்படி.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விசென்னை அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா பரவியது எப்படி.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

மேலும், மின்சார வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி 'பில்'லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான 'பில்'லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நான்கு மாதங்களுக்கு சேர்த்து கட்டணம் நிர்ணயிப்பதால், 500 யூனிட்களுக்கு மேல் மின் பயன்பாடு வரும் போது, அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும், இதனால் 500 யூனிட்களுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 96 சதவீத மக்கள் பாதிக்கப்படுவர்கள் எனவும், ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A case has been filed in the Chennai High Court demanding the cancellation of the order issued by the Electricity Board for calculating the amount of electricity for home use in the lockdown period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X