பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய வழக்கு: எஸ்.வி.சேகர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக ஒருவர் பேஸ்புக் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த தகவலை, நடிகரும் பாஜக-வை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டு இருந்தார்.

கொந்தளிப்பை ஏற்படுத்திய எஸ்.வி.சேகர் பதிவு
இந்த விவகாரம் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், பெண்ணிய அமைப்புகள், அரசியல் கட்சியினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் வீட்டின் வாசல் முன்பாகவே போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு
இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்

மீண்டும் மன்னிப்பு கேட்க தயார்
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபரின் கருத்தையே எஸ்.வி.சேகர் பகிர்ந்தார். பிரச்சனை வந்தவுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவை நீக்கியதுடன் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், நீதிமன்றத்தில் மேலும் ஒரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவித்தார்.

ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி.சேகர்
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை எனக்கூறினார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 2 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யார் அந்த அமெரிக்க வாழ் தமிழர்?
அப்போது பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications